நோ நோ அது சரிபட்டு வராது... அந்த சீனியர் ஹீரோவுடன் நடிக்க உசர ஹீரோயினும் உடனடியா மறுத்துட்டாராம்!
சென்னை: சீனியர் ஹீரோவுடன் நடிக்க, அந்த உயர ஹீரோயினும் மறுத்துவிட்ட செய்தி இப்போது பரபரப்பாகி இருக்கிறது.
தமிழ், தெலுங்கில் நடித்து வருகிறார் அந்த உயரமான ஹீரோயின். அவருக்கு இனிப்பு என்கிற இன்னொரு பெயரும் இருக்கிறது.
தற்போது அவர் நடிப்பில் ஒரே ஒரு படம் மட்டுமே வெளியாக இருக்கிறது. அடுத்து, சில படங்களில் நடிக்க இருக்கிறார், அந்த ஹீரோயின்.

காதல் கிசுகிசு
அவரது திருமண விவகாரம் டோலிவுட்டில் பரபரப்பாக கிளம்ப, உடனடியாக மறுத்திருந்தார் சமீபத்தில். முதலில் அந்த ஹீரோவுடன் கிசுகிசுக்கப்பட்டார். அவர் என் நண்பர், எங்களுக்குள் அது இல்லை என்று மறுத்திருந்தார். பிறகு கிரிக்கெட் வீரருடன் இணைத்துப் பேசப்பட்டார். அதுவும் உண்மை இல்லை என்றார். இதற்கிடையே, பிரபல இயக்குனரின் மகனுடன் இணைத்துப் பேசப்பட்டார்.

பிசியாக இல்லை
அவர் விவகாரத்தான இயக்குனர்தான் என்பதால், இந்த செய்தி டோலிவுட்டில் உண்மையாக இருக்கும் என்று கூறப்பட்டது. ஆனால் இதையும் மறுத்திருந்தார், ஹீரோயின். 'என் கல்யாண விஷயத்துல நீங்க காட்டுற அக்கறைக்கு நன்றி. அது உண்மையா நடக்கும்போது நானே சொல்றேன் என்று கூறியிருந்தார். இப்போது பிசியாக நடிக்கவில்லை என்றாலும் வீட்டில் உறவினர்களுடன் பொழுதைக் கழித்து வருகிறார் ஹீரோயின்.

நம்பர் நடிகை
இதைத் தெரிந்து கொண்டு, அந்த சீனியர் ஹீரோ ஜோடியாக நடிக்க, இந்த நடிகையிடம் பேசினார்கள். அந்த சீனியர் ஹீரோ படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்த, நம்பர் நடிகை திடீரென விலகி இருந்தார். அக்ரிமென்ட் போட்டு, எல்லாம் முடிந்த நிலையில் ஷூட்டிங் போக வேண்டிய நேரத்தில், நடிகை விலகியதால் படத்துக்குச் சிக்கல் ஏற்பட்டது. அவர் விலக, படத்தில் இன்னொரு ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுத்ததுதான் காரணம் என்கிறார்கள்.

மறுத்து விட்டார்
இந்த நிலையில்தான் அந்த இனிப்பு ஹீரோயினிடம் பேசியுள்ளனர். கதையை கேட்டுவிட்டு, உடனடியாக மறுத்து விட்டாராம். ஏனென்றால், படத்தில் இருந்து விலகியதற்கு நம்பர் நடிகை என்ன காரணம் சொன்னாரோ, அதே காரணத்தைத்தான் இவரும் கூறியிருக்கிறார். கேட்ட சம்பளம் தருவாகச் சொல்லியும் உசர ஹீரோயின் அசையவில்லையாம். 'நோ நோ எனக்கு அது சரிபட்டு வராது' என்று கூறிவிட்டாராம்.

அகர்வால் நடிகை
அதற்குப் பிறகுதான், அந்த அகர்வால் நடிகையிடம் பேசியுள்ளனர். இவர் அந்த ஹீரோவுடன் ஏற்கனவே நடித்திருக்கிறார். உடனடியாக ஒப்புக்கொள்ளாத நடிகை, சூழ்நிலையை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி சம்பளத்தை உயர்த்தினார். வேறு வழியே இல்லாமல், கேட்ட சம்பளத்தைக் கொடுத்து நடிகையை ஒப்பந்தம் செய்திருக்கிறார்களாம்.


Click it and Unblock the Notifications











