'கதைலாம் வேண்டாங்க, அதை மட்டும் பேசுவோம்..' அந்த சீனியர் ஹீரோயின் அதுலதான் குறியா இருக்காராம்!

By

சென்னை: அந்த சீனியர் மும்பை ஹீரோயின் ஒரே ஒரு விஷயத்தில் மட்டுமே குறியாக இருப்பதால், இயக்குனர்கள் அப்செட் ஆகிறார்களாம்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் என வளைத்துப் பிடித்து நடித்து வருகிறார், அந்த சீனியர் நம்பர் ஹீரோயின்.

தெலுங்கில் சீனியர் ஹீரோவுக்கு ஜோடியாக நடிக்க, ஒப்பந்தமாகி இருந்தார்.

விலகினார்

விலகினார்

ஏற்கனவே சில வருடங்களுக்கு முன் அந்த சீனியர் ஹீரோவுடன் நடித்திருக்கிறார், இந்த நடிகை. தனக்கும் வயதாகி விட்டதாலும் கேட்ட சம்பளம் கிடைக்கும் என்பதாலும் ஓகே சொல்லி இருந்தார். அக்ரிமென்ட் போட்டு, எல்லாம் முடிந்த நிலையில் ஷூட்டிங் போக வேண்டிய நேரத்தில், படத்தில் இருந்து விலகியதாக அறிவித்தார்.

இன்னொரு ஹீரோயின்

இன்னொரு ஹீரோயின்

அவர் திடீரென்று விலக, படத்துக்குள் இன்னொரு ஹீரோயின் வந்ததுதான் காரணம் என்றார்கள். அதாவது படத்தில் இளம் ஹீரோ ஒருவர் நடிக்கிறார். அந்த கேரக்டரில் நடிக்க டாப் ஹீரோ ஒருவரை கேட்டனர். கடைசியில் சீனியர் ஹீரோவின் மகனே அந்த கேரக்டரில் நடிக்க இருப்பதாகச் சொல்கிறார்கள். அவருக்கு ஜோடியாக, இப்போதைய டாப் ஹீரோயின் ஒருவரை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

மிட்டாய் கடை நடிகை

மிட்டாய் கடை நடிகை

அவர் கேரக்டரை பெரிதாக்கி, கதையையும் மாற்றியதால் நம்பர் நடிகையின் கேரக்டர் சுருங்கிவிட்டதாம். இதனால்தான் அவர் விலகியதாகச் சொல்கிறார்கள். இதையடுத்து அந்த மிட்டாய் கடை நடிகையிடம் பேசினர். அவருடன் நடிக்க, பல ஹீரோயின்கள் மறுத்து வரும் நிலையில், சம்மதித்தார், இவர்.

ரேட்டை பேசுவோம்

ரேட்டை பேசுவோம்

பின்னர் சூழலைப் பயன்படுத்திக்கொண்ட நடிகை, சம்பளத்தை கன்னா பின்னாவென்று கேட்க, யோசித்ததாம் தயாரிப்பு. பிறகு 'கதையை கேளுங்க, அதுக்குப் பிறகு முடிவு பண்ணுங்க' என்றாராம் அந்த படத்தின் இயக்குனர். 'ம்ஹூம், முதல்ல ரேட்டை பேசுவோம். ஓகேன்னா மத்தது' என்றாராம் நடிகை. வேறு வழியில்லாததால் கேட்டதைக் கொடுக்கத் தயாரிப்பாளர் ஒப்புக்கொண்டதாகச் சொல்கிறார்கள்.

சம்பளம் ஒகேவா?

சம்பளம் ஒகேவா?

இதற்கிடையே மிட்டாயிடம் அந்த இயக்குனர் கதை சொல்ல முயல, அதெல்லாம் வேண்டாம். சம்பளம் ஒகேன்னா, கதை எப்படி இருந்தாலும் ஓகே -தான் என்றாராம் நடிகை. இதையடுத்து தமிழில் இருந்தும் சில இயக்குனர்கள் கதை சொல்ல முயற்சிக்க, முதல்ல எந்த கம்பெனி, யார் ஹீரோ, என் சம்பளம் இவ்வளவு, தர முடியும்னா மத்ததை பேசுவோம்' என்கிறாராம் நடிகை. இதனால் இயக்குனர்கள் நொந்து போகிறார்கள்.

செட்டில் ஆக நினைக்கிறார்

செட்டில் ஆக நினைக்கிறார்

அந்த மும்பை ஹீரோயினுக்கு வயதாகிவிட்டது. தங்கைக்கு திருமணமாகிவிட்ட நிலையில், இன்னும் ஓரிரு வருடத்துக்குள் செட்டிலாகிவிட வேண்டும் என்று நினைக்கிறாராம் நடிகை. அதற்குள் எவ்வளவு சம்பாதிக்க முடியுமோ, அவ்வளவு சம்பாதித்து விட முடிவு செய்திருக் கிறார் என்கிறார்கள். அதனால்தான் பணத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பதாகச் சொல் கிறார்கள் கோலிவுட்டில்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X