இப்படியாயிடுச்சே.. நல்ல பலன் சொல்வாங்களா? அஸ்ட்ராலஜர்களை தேடி அலையும் பிரபல ஹீரோயின்!
சென்னை: அந்த பிரபல நடிகையும் அவர் அம்மாவும் அஸ்ட்ராலஜர்களை தேடி அலைவதாகச் சொல்கிறார்கள், இன்டஸ்ட்ரியில்.
அந்த டாப் ஹீரோயின் தமிழ், தெலுங்கில் நடித்து வருகிறார். அவருக்கு இரண்டு மொழிகளிலும் ஏகப்பட்ட ரசிகர்கள்.
சீனியர் ஹீரோயின் என்றாலும் இன்னும் மவுசு இருக்கிறது, மலைக்கணக்கில். ஆனால், வாய்ப்புகள்தான் இல்லை.

சார்ட்டட் ஃபிளைட்
அந்த நடிகை பற்றி ஆரம்பத்தில் பலவித அப்படி இப்படி செய்திகள். கிசுகிசு வராத ஹீரோயின் யார் இருக்கிறார்கள்? அப்படித்தான் இவருக்கும். சில ஹீரோக்களுடன் இணைத்து பேசப்பட்ட இவர் பின்னர், தொழிலதிபரும் தயாரிப்பாளருமான ஒருவரை காதலித்தார். இருவரும் சார்ட்டட் பிளைட்டில் சுற்றி வந்தனர்.

தடால் புடலாக
பின்னர் இரண்டு குடும்பங்களும் பேசி, கல்யாணத்துக்கு நாள் குறித்தது. இது அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டது. பிறகு தடால் புடலாக நடந்து முடிந்தது நிச்சயதார்த்தம். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாயின. பிறகு என்ன நடந்ததோ டமார் என முறிந்தது உறவு.

வசதியான ஹீரோ
அதற்கான காரணத்தை இரண்டு தரப்பும் தெரிவிக்கவில்லை. பின்னர் நடிகை அந்த வசதியான ஹீரோவை காதலித்தார். இருவரும் விழாக்களுக்கு ஒன்றாகச் செல்வது, பார்ட்டிகளில் ஜோடியாக கலந்துகொள்வது என இருந்தனர். கைகோர்த்தபடியே இருவரும் எங்கும் சென்று வந்தனர்.

திடீரென பிரிந்தார்
பிறகு அந்தக் காதலும் கைகூடவில்லை. திடீரென பிரிந்தார். அந்த நடிகருடனான காதல் விவகாரத்தை நடிகை வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை என்றாலும் ஹீரோ, அதை ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். அது பெரும் மன வேதனையை தந்ததாகவும் கூறியிருந்தார்.

நிம்மதியாக இருக்கும்
இப்போது நடிகைக்கு படவாய்ப்புகளும் அதிகமாக இல்லை. நல்ல இடத்தில் திருமணம் செய்து கொடுத்துவிட்டால் தனக்கு நிம்மதியாக இருக்கும் என நினைக்கிறார், நடிகையின் தோழி போல இருக்கும் அம்மா. ஆனால், எந்த இடமும் செட்டாகவில்லை. வழக்கமான ஹீரோயின்களை கைப்பிடிக்கும் தொழிலதிபர்கள் கூட கிடைக்கவில்லையாம்.

புகழ்பெற்ற ஜோதிடர்
இதனால், அவர் புகழ்பெற்ற ஜோதிடர்களை சந்தித்து ஆலோசனை கேட்டுக் கொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள் இன்டஸ்ட்ரியில். வந்த திருமண வாய்ப்புகளை விட்டு இப்போது பரிதாபமாக இருக்கிறாரே என நடிகைக்கு வேண்டியவர்கள் கவலைப் படுகிறார்களாம்.


Click it and Unblock the Notifications











