இங்க கண்டுக்கலைன்னா என்ன? அந்த ஹீரோக்கள் ரொம்ப தாராளம்... பிரபல ஹீரோயின் அப்படி புகழ்றாராமே!
சென்னை: இங்கு கண்டுகொள்ளவில்லை என்றாலும் அங்குள்ள ஹீரோக்கள் தேடி அழைத்து வாய்ப்புக் கொடுப்பதால் மகிழ்ச்சியில் இருக்கிறாராம் அந்த ஹீரோயின்.
தமிழ் சினிமாவில் வாய்ப்பு இல்லை என்றால் மற்ற மொழிகளுக்கு ஹீரோயின்கள் செல்வது வழக்கமான ஒன்றுதான்.
இதே போலதான் மற்ற மொழிகளிலும். அவர்களுக்கு அங்கு வாய்ப்பு இல்லை என்றால் இங்கு வருவார்கள்.

மற்ற மொழிகளில்
ஹீரோக்களுக்கு இது ஒர்க் அவுட் ஆகாது என்றாலும் ஹீரோயின்களுக்கு கல்லா கட்ட இது உதவுகிறது. தமிழில் முன்னணி ஹீரோயின்களாக உள்ள பெரும்பாலான நடிகைகள், மற்ற மொழிகளிலும் கவனம் செலுத்தி வருகின்றனர். சில ஹீரோயின்களுக்கு மட்டும் அதிக வாய்ப்புகள் வருகின்றன. சிலருக்கு அப்படி வாய்ப்புகள் வருவதில்லை.

கிசு கிசு
கடந்த சில வருடங்களுக்கு முன், ஒன் டே என்ற படத்தில் இரண்டாவது ஹீரோயினாக நடித்து, தமிழில் அறிமுகமானார், அந்த இளம் நடிகை. நன்றாக நடிப்பதால் தொடர்ந்து வாய்ப்புகள் வந்தன. அடுத்து திருமணமான ஹீரோவுடன் அவர் நடித்த படம் பேசப்படவில்லை என்றாலும் அவர் பற்றிய கிசு கிசுக்கள் அதிகமாகப் பேசப்பட்டன.

பக்கத்து மாநிலம்
அப்படியே பக்கத்து மாநில படங்களிலும் ஒரு காலை வைத்துக் கொண்டிருந்த நடிகைக்கு அதற்கு பிறகு தமிழில், சில படங்கள் மட்டுமே வந்தன. அதிக வாய்ப்புகள் இல்லை. பிறகு இங்குள்ள ஹீரோக்கள் இப்போது சுத்தமாக கை கழுவிவிட, பக்கத்து மாநிலத்தில் தொபுக்கடீர் என விழுந்து விட்டாராம் நடிகை. அங்கேயே செட்டிலாகவும் முடிவு செய்திருக்கிறார் என்கிறார்கள்.

ஹேப்பியா இருக்கேன்
அவர் தமிழில் நடித்துள்ள 2 படங்கள் மட்டும் ரிலீஸுக்கு வெயிட்டிங். அதுவும் பைனான்ஸ் சிக்கலால் சிக்கிக் கொண்டிருப்பதும், நடிகை அப்படியொரு முடிவை எடுக்க காரணமாம். இந்நிலையில் பார்க்கிறவர்களிடம், 'இங்க வாய்ப்பு இல்லைன்னா என்ன, அங்க எனக்கு அதிக வாய்ப்பு வருது. அந்த ஹீரோக்கள்லாம் நல்லவங்க... அதனால ஹேப்பியா இருக்கேன்' என்று பாராட்டுகிறாராம் நடிகை!


Click it and Unblock the Notifications











