கோலிவுட்டின் லேட்டஸ்ட் டாக்.. அடுத்த காதலில் இளம் ஹீரோ.. பெண் தயாரிப்பாளருடன் பிக்கப் ட்ராப்!
சென்னை: அந்த இளம் ஹீரோ அடுத்த காதலில் விழுந்துவிட்டதாகவும் பெண் தயாரிப்பாளரை அவர் காதலித்து வருவதாகவும் கிசுகிசுக்கிறது கோலிவுட்.
எதையும் சீரியசாக எடுத்துக்கொள்ளாத ஹீரோ அவர். இரண்டெழுத்து பெயர் கொண்ட அவர் ஜாலி கேலியான ஆள்.
தான் உண்டு, தன் வேலையுண்டு என்றில்லாமல், நடிகைகளிடம் அன்பு காட்டுவதில் எங்கேயும் எப்போதும் வல்லவர்.

மயங்கி கிடந்தார்
இவருக்கும் நடிகை ஒருவருக்கும் பற்றிக்கொண்ட காதல் ஒன்று திடீரென்று முறிந்தது. பிறகு சில காலம் அமைதியாக நடித்த ஹீரோ அடுத்த காதலில் விழுந்தார். அவருக்கும் அந்த ஸ்ட்ரீட் பட நடிகைக்குமான காதல் கோலிவுட் அறிந்ததுதான். ஒன்றாகவே வசித்து வந்த இருவரும் திருமணம் செய்து கொள்ளவும் முடிவு செய்திருந்தனர்.

நழுவினார் நடிகை
இதுபற்றி அரசல் புரசலாக பேட்டியும் கொடுத்திருந்தார் ஹீரோ. சில வருடங்களாகச் சுமூகமாகச் சென்று கொண்டிருந்த இந்தக் காதலும் என்ன காரணத்தாலோ நொறுங்கியது. பிறகு, 'ஐயையோ நாங்க ஃபிரண்ட்ஸ்தான், எங்களுக்குள்ள எதுவும் இல்லை' என்று நழுவினார் நடிகை. அப்செட்டான ஹீரோ, போதையில் மயங்கி கிடந்தார், காதல் ஃபீலிங்கில்.

மீண்டும் காதல்
இப்போது படங்களில் கவனம் செலுத்தி வரும் ஹீரோ, மீண்டும் காதலில் விழுந்துவிட்டதாகச் சொல்கிறார்கள் கோலிவுட்டில். இரண்டு ஹீரோ படம் ஒன்றில் நடித்து வருகிறார் அந்த ஹீரோ. இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடந்து வருகிறது இப்போது. அதை தயாரிப்பவர் பெண் தயாரிப்பாளர் ஒருவர். இவர், பிரபல தயாரிப்பாளர் மகனை திருமணம் செய்திருந்தவர்.

பிரிந்து விட்டனர்
அந்த மகன் சில படங்களை இயக்கினார். ஒரு படத்தில் நடிக்கவும் செய்தார். என்ன பிரச்னையோ? இருவரும் பிரிந்து விட்டதாகச் சொல்கிறார்கள். ஆனால், அஃபிஷியலாக விவாகரத்து செய்து கொண்ட தகவல் இல்லை. அந்தப் பெண் தயாரிப்பாளருடன் ஹீரோவுக்கு காதல் பற்றிக் கொண்டதாம். இருவரும் ஒன்றாகத்தான் படப்பிடிப்புக்கு வருகிறார்களாம்.

விழுந்து விடுகிறார்
ஆரம்பத்தில் ஹீரோவை பிக்கப் டிராப் செய்துகொண்டிருந்தாராம் அந்த பெண் தயாரிப்பாளர். இப்போது இருவரும் ஒரே வீட்டில் வசித்து வருவதாகவும் சொல்கிறார்கள். அந்த இளகிய ஹீரோ அடிக்கடி இப்படி காதலில் விழுந்துவிடுகிறார். இந்த காதலாவது அவருக்கு நிலைக்க
வேண்டும் என்கிறார்கள், அவருக்கு வேண்டியவர்கள்.


Click it and Unblock the Notifications











