ஹீரோவின் காதலில் டொப்பென்று விழுந்த அந்த ஹீரோயின்.. அவசரமாக மறுத்தாலும் அதுதான் உண்மையாமே!

By

சென்னை: அந்த பிரபல ஹீரோயின் காதலில் விழுந்திருப்பது உண்மைதான் என்று சொல்கிறார்கள்.

சினிமாவில் காதல் புதிதில்லை. நடிகர், நடிகைகளுக்குள் வருகிற காதலும் புதிதில்லை.

பல நடிகர், நடிகைகள் காதலித்து திருமணம் செய்திருக்கிறார்கள். செய்து வருகிறார்கள்.

பல சகஜங்களில்

பல சகஜங்களில்

அப்படி காதலித்து திருமணம் செய்துகொண்டவர்கள், பிரிந்து போன சம்பவங்களும் நிறைய நடந்திருக்கிறது. பல நடிகர், நடிகைகளின் பிரமாண்ட திருமணங்கள் கருத்து வேறுபாடு காரணமாக, அப்படி ஆகியிருக்கிறது. எளிதாக விவாகரத்து பெற்றும் வேறொருவரை திருமணமும் செய்துகொள்வார்கள். சினிமாவில் நடக்கும் பல சகஜங்களில் இதுவும் ஒன்று.

இளம் ஹீரோயின்

இளம் ஹீரோயின்

இந்நிலையில். சமீபத்தில் காதலில் விழுந்திருக்கிறார், அந்த இளம் ஹீரோயின். அதிகாரம் கொண்ட படம் மூலம் கவனிக்கப்பட்ட அந்த ஹீரோயின் இப்போது, அந்த இரண்டாம் பாகப் படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்துவருகிறார். தமிழில் அவருக்கு படங்கள் குறைவு என்றாலும் பாலிவுட்டிலும் பக்கத்து மாநிலத்திலும் நடிகைக்கு வரவேற்பு.

விவகார விசாரணை

விவகார விசாரணை

கையில் ஏகப்பட்ட படங்களை வைத்திருக்கும் அவர், பாலிவுட்டில் சமீபத்தில் புதிதாக இரண்டு படங்களில் கமிட் ஆகியிருக்கிறார். சமீபத்தில் போதை விவகார விசாரணையில் ஆஜரான அந்த நடிகை, பக்கத்து மாநில ஹீரோ ஒருவரை பக்காவாக காதலித்து வருகிறார் என்கிறார்கள்.

அதிரடியாக மறுத்தார்

அதிரடியாக மறுத்தார்

அந்த இளம் ஹீரோவும் பெரிய இடம்தானாம். இதை மறைமுகமாக சமீபத்தில் பேட்டி ஒன்றில் குறிப்பிட்டிருந்த நடிகை, காதலையும் திருமணத்தையும் நம்புகிறேன் என்று கூறியிருந்தார். பிறகு இந்த விவகாரம் கொஞ்சம் அரசல் புரசலாக பரவ அதிரடியாக மறுத்தார்.

நான் சிங்கிள்தான்

நான் சிங்கிள்தான்

'நான் காதல் பற்றி பொதுவாகத்தான் சொன்னேன். அதன் மீது நம்பிக்கை இருப்பதாகத்தான் சொன்னேன். ஆனால் நான் யாரையும் காதலிக்கவில்லை, எனக்கு திருமண ஏற்பாடுகளும் நடக்கவில்லை. நான் சிங்கிள்தான் என மறுத்து பேட்டி கொடுத்திருக்கிறார், பக்கத்து மாநிலத்தில்.

எக்ஸ்பிரஸ் வேகம்

எக்ஸ்பிரஸ் வேகம்

ஆனால், அந்த இளம் ஹீரோ மற்றும் ஹீரோயினுக்கான காதல் எக்ஸ்பிரஸ் வேகத்தில் பறப்பதாகச் சொல்கிறார்கள். எந்த ஹீரோயின், ஹீரோ தங்கள் காதலை உடனடியாக ஒப்புக் கொண்டிருக்கிறார்கள்? அதுபோல்தான் இதுவும். விரைவில் தானாக வெளிவரும் தகவல் என்கிறார்கள், இன்டஸ்ட்ரியில்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X