நெசம்தானா? அந்த இளம் ஹீரோ திருமணத்துக்கு மீடியேட்டராக செயல்படும் பிரபல ஹீரோயின்!

By

சென்னை: அந்த இளம் ஹீரோவின் திருமணத்துக்கு, பிரபல ஹீரோயின்தான் பாலமாக செயல்படுவதாகச் சொல்கிறார்கள் சினிமா வட்டாரத்தில்.

தமிழில் இருந்து தெலுங்கு சினிமாவுக்கு சென்று செட்டிலாகிவிட்ட ஹீரோயின் அவர்.

டாப் ஹீரோ குடும்பத்துப் பெண்ணாகிவிட்ட அவர், தொடர்ந்து படங்களில் நடித்தும் வருகிறார்.

ஒர்க் அவுட் போட்டோ

ஒர்க் அவுட் போட்டோ

அடுத்து தமிழிலும் சில படங்களில் நடிக்க இருக்கிறார். இவர் பற்றி அடிக்கடி ஏதாவது வதந்திகள் வருவதும் அதற்கு அவர் மறைமுகமாக பதில் சொல்வதும் வழக்கம். கடந்த சில மாதங்களுக்கு முன் நடிகை கர்ப்பமாக இருப்பதாக செய்தி பரவ, திடீரென்று வெயிட் லிஃப்டிங் செய்வது போல தனது ஒர்க் அவுட் போட்டோவை பதிவு செய்து அவர்கள் வாயை அடைத்தார்.

குடும்பத்தில் பிரச்னை

குடும்பத்தில் பிரச்னை

பிறகு சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இல்லை என்பதால், நடிகைக்கும் கணவருக்கும் பிரச்னை என்றார்கள். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, கணவர் பர்த் டேவுக்கு பக்காவான காதல் போஸ்ட் பதிவிட்டிருந்தார். பிறகு அவருக்கு கொரோனா என்றார்கள். தனக்கு கொரோனா இல்லை என்பதையும் மறுத்திருந்தார்.

புதிய தகவல்

புதிய தகவல்

இப்போது அவர் பற்றி புதிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. அதாவது அவர்கள் குடும்பத்தில் உள்ள மற்றொரு இளம் ஹீரோவுக்கு பெண் பார்க்கும் விஷயத்தில் இவர்தான் மீடியேட்டர் என்கிறார்கள். அதாவது அந்த ஹீரோ பிரபல முன்னாள் ஹீரோயினின் மகனும் கூட. அந்த ஹீரோவுக்கு நடிகை அண்ணி முறை.

நின்று போனது

நின்று போனது

அந்த ஹீரோவுக்கும் பிரபல தொழிலதிபர் குடும்பத்து ஃபேஷன் டிசைனர் பெண்ணுக்கும் ஏற்கனவே திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. நிச்சயதார்த்தமும் பிரமாண்டமாக நடந்தது. பிறகு என்னானதோ தெரியவில்லை, திருமணம் திடீரென்று நின்றுபோனது. இதற்கான காரணம் இதுவரை தெரியவில்லை.

தொழிலதிபர் குடும்பம்

தொழிலதிபர் குடும்பம்

இந்நிலையில் அந்த இளம் ஹீரோவுக்கும் பிரபல தொழிலதிபர் வீட்டுக்குப் பெண்ணுக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்திருக்கிறார்களாம். ஹீரோ குடும்பத்தை விட அந்த புகழ்பெற்ற தொழிலதிபர் குடும்பம் செல்வாக்கானது என்பதால் அதில் ஏதோ சிக்கல் என்கிறார்கள். இது காதல் திருமணமா எனபது பற்றிய விவரம் தெரியவில்லை.

நல்ல செய்தி

நல்ல செய்தி

இதற்கிடையே, அந்த தொழிலதிபர் குடும்பத்துக்கும் ஹீரோ குடும்பத்துக்கும், பேசி முடிக்கும் விஷயத்தில் பாலமாக செயல்படுகிறாராம் அந்த ஹீரோயின். இதனால் அந்த இளம் ஹீரோ நம்பிக்கையுடன் இருக்க, சீக்கிரம் நல்ல செய்தி வரும் என்கிறார்கள். டோலிவுட்டில் இதுதான் பேச்சாகக் கிடக்கிறது இப்போது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X