மாடுடன் முட்டி மோத தயாரான நடிகர்.. கடைசியில இப்படி ஆய்டுச்சே !

சென்னை : படக்காட்சிகள் தத்ரூபமாக இருக்க வேண்டும் என்பதற்காக காளையுடன் மோத தயாரானார் அந்த நடிகர். ஆனால் கடைசியில் கொரோனா வந்து எல்லாவற்றையும் நிறுத்தி விட்டது.

தொடர்ந்து பல வெற்றி படங்களை கொடுத்து, இவர் எடுத்தாலே படம் வெற்றிதான் என்ற அளவிற்கு சொல்லப்பட்டு வருபவர். பெயரில் வெற்றி கொண்ட இயக்குனர். தற்போது அவர் ஒரு பெரிய நடிகரை வைத்து இயக்கவுள்ளார். படபிடிப்புக்கு முன்னராகவே கதாநாயகனை தயார் படுத்த வேண்டும் என்று மும்முரமாக இருக்கிறார்.

 The actor ready to bull fight

சில வருடங்களாகவே சுமாரான படங்களை கொடுத்து வரும் சிங்கம் சார் இம்முறை ஒரு வெற்றி படத்தை கொடுக்க வேண்டும் என்ற நம்பிக்கையில் உள்ளார். நல்ல கதைக்காக ஏங்கும் இவருக்கு ஒரு வெற்றி இயக்குனர் அமைந்திருப்பது அதிஷ்டம்தான்.

எனவே இப்படத்தை நல்லபடியாக கொடுக்க வேண்டும் என்று படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இந்த படத்தில் வரும் காட்சிகள் தத்ரூபமாக இருக்க வேண்டுமென்பதால் ஹீரோவிற்கு சற்று பயிற்சி கொடுக்க வேண்டும் என்று இயக்குனர் முடிவு செய்திருந்தார்.

 The actor ready to bull fight

ஆனால் இந்த நேரத்தில் லாக்டவுன் வந்ததால் இவருக்கு பயிற்சி கொடுக்க கோவையில் இருந்து வரவேண்டிய காளைகள் நின்றுவிட்டன. எப்படியும் ஷூட்டிங் தொடங்க குறைந்தது 2 மாதங்கள் ஆகும் என்பதால் அதுவரை பயிற்சி கொடுக்க காளைகளை சிறப்பு அனுமதி கேட்டு வரவைக்கலாம் என படக்குழுவினர் முடிவெடுத்துள்ளனர்.

 The actor ready to bull fight

நல்ல உடல் பயிற்சி செய்யும் சிங்கம் சார் மாட்டுடன் முட்டி மோதி பயிற்சி எடுக்க மிகவும் ஆர்வமாக இருப்பதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காளை மாடுகளுடன் மோதும் சிங்கம் சார் எப்படியும் திரையில் பல கிராபிக்ஸ் காட்சிகள் செய்து தான் மோத போகிறார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இருந்தாலும் சில சில காட்சிகள் உண்மையாக இருக்க வேண்டும் என்பதற்காக சில பல பயிற்சிகளை செவ்வனே செய்ய வேண்டும் என்பதில் வெற்றி பட இயக்குனர் மிகவும் தீவிரமாக இருக்கிறாராம் என்ன நடக்க போகுது என்பது இன்னும் சில தினங்களில் தெரியும்.

More from Filmibeat

Read more about: gossip கிசுகிசு
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X