யாருக்கும் தெரியாதாம்... சம்பாதித்த பணத்தை வைத்து பினாமி பெயர்ல படம் தயாரிக்கிறாராமே அந்த ஹீரோயின்?
சென்னை: சத்தம் போடாமல் பினாமி பெயரில் படம் தயாரித்து வருகிறாராம் அந்த ஐந்தெழுத்து ஹீரோயின்.
பாடகியாகத்தான் சினிமாவுக்குள் என்ட்ரி ஆனார் அவர். பிறகு அவர் அழகைப் பார்த்து கிரீன்கிளி படம் மூலம் நடிகை ஆக்கினார் மேனன் இயக்குனர்.
இப்போது ஹீரோயினாகவும் பாடகியாகவும் இருக்கிறார், அந்த ஆங்கிலோ இந்தியன் நடிகை.

அந்த மாதிரி கேரக்டர்
இவர், சமீபத்திய படங்களில் கொஞ்சம் கிளாமராகவே நடித்திருந்தார். படுக்கையறை காட்சிகளிலும் துணிந்து நடித்திருந்தார். இதனால் நடிகைக்கு அந்த மாதிரியான கேரக்டர்களாகவே வந்தாம். அதனால் அந்தப் படங்களில் கமிட் ஆகாமல் தேர்ந்தெடுத்து மட்டுமே நடித்து வருகிறார். இப்போது இரண்டு மூன்று படங்களில் நடித்துவருகிறார்.

திருமணம் ஆனவருடன்
கடந்த சில மாதங்களுக்கு முன் இவர் சொன்ன கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. அதாவது திருமணம் ஆன ஒருவருடன் தொடர்பில் இருந்தேன். அதனால் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் அவரால் துன்புறுத்தலுக்கு ஆளானேன் என்று கூறியிருந்தார். இது பரபரப்பானது. அவர் அரசியல்வாதி என்றும் கூறியிருந்தார். அந்த அரசியல்வாதி யார் என்ற பரபரப்பும் எழுந்தது.

சம்பாதித்த பணத்தை
இந்நிலையில் இந்த நடிகை, டாப் ஹீரோவின் மாஸ்டரான படத்திலும் நடித்து வருகிறாராம். இதில் அவருக்கு முக்கியமான கேரக்டர் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் தான் சினிமாவில் சம்பாதித்ததை சினிமாவிலேயே முதலீடு செய்ய நினைத்தாராம் நடிகை. பல நடிகைகள், சம்பாதித்த பணத்தை வேறு ஏதாவது வழியில் முதலீடு செய்துகொண்டிருக்க, இவர் இப்படியொரு முடித்திருக்கிறார்.

பினாமியாக
இதற்காக தனக்கு வேண்டிய இயக்குனர் ஒருவரின் நிறுவனத்தின் சார்பில் பினாமியாக படம் தயாரிக்கிறார். இன்வெஸ்ட்மென்ட் எல்லாம் நடிகைதானாம். படத்துக்கான வேலைகள் பரபரப்பாக நடந்து வருகிறது. சமீபத்தில் போட்டோஷூட் நடந்திருக்கிறது. என்னதான் ரசிசியமாக தயாரித்தாலும் சின்ன வட்டமான சினிமாவில் இதெல்லாம் தெரியாமலே போய்விடும்? என்கிறார்கள் கோலிவுட்காரர்கள்.


Click it and Unblock the Notifications











