நாலு நாளா புல் போதை.. படப்பிடிப்புக்கு தள்ளாடி வந்த நடிகை!
சென்னை: கேரளாவைச் சேர்ந்த இளம் நடிகை ஒருவர் கூடாத நட்புகளுடன் சேர்ந்து தவறான பழக்கத்தை கற்றுக்கொண்டு தனது பெயரை கெடுத்துக்கொண்டுள்ளார். இந்த மோசமான பழக்கத்தில் நடிகையின் சினிமா வாழ்க்கையே முடித்து போகும் சூழல் ஏற்பட்டுள்ளது.
மலையாள நடிகையான இவரின் நடனத்தை பார்த்த இயக்குநர், தனது படத்தில் இவரை கதாநாயகியாக அறிமுகம் ஆனார். 13 வயதிலேயே ஹீரோயினாக நடித்து பெயர் எடுத்த இந்த நடிகைக்கு மலையாளத்தை தொடர்ந்து, தமிழ் சினிமாவிலும் அறிமுகம் வாய்ப்பு கிடைக்க, அதை சரியாக பயன்படுத்திக் கொண்டார். இவர் நடித்த முதல் படமே மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதால், அடுத்தடுத்த படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அனைவருக்கும் பிடித்தமான நடிகை ஆனார்.

கூடாத பழக்கம்: இந்த இளம் நடிகை நடித்தால் படம் நிச்சயம் வெற்றி பெறும் என பலர் சொல்லும் அளவிற்கு ரசியான நடிகையாக இருந்தார். ஆனால், கூடாத நட்புகளால், சில மோசமான பழக்கத்தை கற்றுக்கொண்டு எந்த நேரமும் போதையிலேயே இருந்துள்ளார். இந்த போதை பழக்கத்தால், பீக்கில் இருந்த நடிகைக்கு படவாய்ப்பே இல்லாமல் போக கடைசியில் இந்த நடிகை இருக்கும் இடமே தெரியாமல் போனது. அண்மையில் இவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு பொது இடத்தில் ஒரு நபரை அடித்து துன்புறுத்திய வழக்கில் சிக்கி தலைமறைவானார்.
ஓவர் போதை: அந்த பிரச்சனைகள் எல்லாம் முடிந்து தற்போது தான், இளம் நடிகைக்கு சினிமா வாய்ப்பு தேடிவந்தது. இதன் படப்பிடிப்புகாக படக்குழுவினர் மலேசியாவிற்கு சென்றுள்ளனர். ஆனால், மலேசியா சென்றதும், தனது வேலையை காட்டிய நடிகை தொடர்ந்து 4 நாட்கள் படப்பிடிப்புக்கு வராமல், ஓட்டல் அறையின் கதவை சாத்திக்கொண்டு இருந்துள்ளனார். இதனால், படப்பிடிப்பு நடித்த முடியாமல் போய்விட்டது. காலை 9 மணி படப்பிடிப்புக்கு வர வேண்டிய நடிகை மதியத்துக்கு மேல் எழுந்திருக்கவே முடியாதபடி ஒருவிதமான மயக்கத்தில் தள்ளாடிக்கொண்டே வந்துள்ளார். இதைப்பார்த்து கடுப்பான இயக்குநர், இப்படியே போனால் படப்பிடிப்பை நடத்த முடியாது என்று தயாரிப்பு நிறுவனத்திடம் சொல்ல, தயாரிப்பு நிறுவனம் படத்தில் இருந்து அவரை நீக்கி விட்டு வேறு ஒரு நடிகை கமிட் செய்துள்ளனர். நல்ல திறமையான அந்த இளம் நடிகை மோசமான பழக்கத்தில் அவரின் சினிமா வாழ்க்கையே தற்போது கேள்விக்குறியாகி உள்ளது.


Click it and Unblock the Notifications











