சில்மிஷம் செய்த வில்லன் நடிகர்.. கெஞ்சிய தயாரிப்பாளர்..வலையில் சிக்காத பிரபல நடிகை!
சென்னை: சினிமாவில் இருக்கும் அட்ஜஸ்ட்மென்ட்கள் பற்றி வெளியில் சொன்னால் மானம் போய்விடும் என்று வாய் திறக்காமல் இருந்த நடிகைகள் தற்போது அது குறித்து தைரியமாக பேசி வருகின்றனர். அப்படித்தான் வளர்ந்த நடிகை ஒருவர், பெரிய நடிகர் படப்பிடிப்பின் போது சில்மிஷம் செய்தும், அவரின் மூக்கை உடைத்து, அந்த நடிகரின் வலையில் சிக்காமல் எஸ்கேப்பாகி உள்ளார்.
இயக்குநர், வில்லன், ஹீரோ என எதுவானாலும், புகுந்துவிளையாடும் அந்த நடிகர், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அசால்டாக செய்து அதில், நல்ல பெயர் எடுத்துவிடுவார். ஆனால், அந்த நடிகருக்கு 50 வயதான போதும், இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் முரட்டு சிங்கிளாகவே இருக்கிறார்.

குறைந்த படவாய்ப்பு: டாப் நடிகர்களை வைத்து ஹிட் படங்களை எடுத்த இவர், ஒரு சில படத்தில் ஹீரோவாகவும் நடித்துள்ளார். இவர் கதாநாயகனாக நடித்த திரைப்படம் வெற்றி பெற்றதை அடுத்து தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாகவே நடித்தார். ஆனால், அந்த படங்கள் சரியாக போகாததால் அந்த திறமையான நடிகருக்கு படவாய்ப்பே இல்லாமல் போனது. இதனால், சினிமாவை விட்டு கொஞ்ச காலம் காணாமலே போய்விட்டார்.
மிரட்டலான வில்லன்: அதன்பின், எப்படியோ முட்டிமோதி மீண்டும், ஒரு படத்தில் சிறப்பான கேரக்டரில் நடித்தார். அந்த கதாபாத்திரம் அனைவரையும் உச்சுகொட்ட வைத்து சபாஷ்போட வைத்தது. இதைத் தொடர்ந்து, இனி ஹீரோ கேரக்டர் தனக்கு செட்டாகாது என புரிந்து கொண்ட, அந்த திறமையான நடிகர். வில்லனாக என்ட்ரி கொடுத்து தொடர்ந்து பல படங்களில் மிரட்டலான வில்லனாக நடித்து வருகிறார். அண்மையில் இவர் வில்லனாக நடித்த படங்கள் சக்கைப்போடு போட்டு வருவதால், அந்த திறமையான நடிகருக்கு தொடர்ந்து பல படங்களில் நடிக்க வாய்ப்பு குவிந்து வருகிறது.
அட்ஜஸ்ட்மென்ட்: திறமையான நடிகரான இவர், தன்னுடன் இணைந்து நடிக்கும் நடிகைகளை சில்மிஷம் செய்யும் விஷயத்திலும் திறமையானவர். அட்ஜஸ்ட்மென்ட் செய்தால் தான் தன்னுடன் சேர்ந்து நடிக்க முடியும் என்று பல நடிகைகளுக்கு கட்டளையிட்டு இருக்கிறார். இதனால், நடிகைகள் பலர் இவர் படத்தில் இருந்து விலகி ஓடிய சம்பவங்களும் நடந்துள்ளது. அப்படிப்பட்ட சில்மிஷ நடிகருடன் இரண்டு படத்தில் ஜோடியாக நடித்த அந்த பிரியமான நடிகை, அவருக்கு கொஞ்சம் கூட வளைந்து கொடுக்காமல் எஸ்கேப்பாகி உள்ளார்.
மறைமுகமாக சில்மிஷம் செய்ததை புரிந்து கொண்ட அந்த நடிகை, தயாரிப்பாளரிடம் சென்று, புகார் கொடுக்க பதறிப்போன தயாரிப்பாளர், திறமையான நடிகரிடம் ஒடிவந்து, அவரிடம் சேட்டை செய்துவிடாதீர்கள், படம் பாதி முடிந்துவிட்டது, வேறு ஹீரோயின் இந்த கதைக்கு செட்டாகாது என்று கெஞ்சி கேட்டு இருக்கிறார். இதையடுத்து, அந்த திறமையான நடிகர் வாலை சுருட்டி கொண்டு, அந்த நடிகை இருக்கும் பக்கமே திரும்பவில்லையாம்.


Click it and Unblock the Notifications











