தீவிரமாகும் போதை மாத்திரை விவகாரம்.. விசாரணை பயத்தில் நடிகைகள்.. பொய் சொல்லி எஸ்கேப்பான ஹீரோயின்?
சென்னை: அந்த விவகாரம் எங்கு போய் முடியுமோ என்று தவித்துக் கொண்டிருக்கிறார்கள் சில ஹீரோயின்கள்.
Recommended Video
சினிமாவில், போதை சாதாரண விஷயம் என்று எப்போதும் சொல்லப்படுவது உண்டு.
கலைஞர்களின் உலகத்தில் களிப்புக்கு இடம் இல்லாமலா? என்று பொயட்டிக்காகவும் சொல்வார்கள்.

போதைப் பொருள்
இந்தப் போதை எல்லாம் மதுபாட்டில்களோடு முடிபவை. ஆனால், போதை ஊசி, மாத்திரைகள் என்று அதற்கு அடுத்தக் கட்டத்துக்கு சென்றுவிட்டதாகச் சொல்வார்கள் பாலிவுட்டை. இளம் நடிகர் தற்கொலை செய்துகொண்டதை அடுத்து நடக்கும் விசாரணையில் மீண்டும் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது போதைப் பொருள் விவகாரம்.

டிவி நடிகை கைது
பரபரப்பாக இந்தப் பிரச்னை சென்று கொண்டிருக்கும் போதுதான் கடந்த சில நாட்களுக்கு முன், பெங்களூரில் கைது செய்யப்பட்டனர் டிவி நடிகை உள்பட 3 பேர். அவர்களிடம் விசாரித்தால், சினிமாவில் நடக்கும் பார்ட்டிகளுக்கு தாங்கள்தான் போதை சப்ளை என்றிருக்கிறார்கள். அவர்களின் லிங்கை விசாரித்தால், அதில், பல பெரிய தலைகளில் இருந்து சில டாப் நடிகர், நடிகைகளும் இருப்பது தெரியவந்தது.

போதை தொடர்பு
அடுத்தக்கட்ட விசாரணையில், சிக்கினார் அரசு ஊழியர் ஒருவர். அவரை விசாரித்தால், அவருக்கும் பல நடிகர், நடிகைகளுக்குமான போதை தொடர்பு புல்லரிக்க வைத்தது. அவரை வைத்து அவரது நெருங்கிய தோழி எனச் சொல்லப்படும் நடிகையை வளைத்தது போலீஸ். விசாரணையின் சீரியஸ்னஸ் தெரியாமல் தனது வக்கீலை போலீசிடம் அனுப்பி பேசச் சொன்னார் நடிகை.

அதிரடி ரெய்டு
மறுநாள் காலையில் அவர் வீட்டில் அதிரடி ரெய்டு நடத்தி கைது செய்திருக்கிறது போலீஸ். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள இன்னொரு தொழிலபதிர், கல்ராணி நடிகையின் நெருங்கிய தோழராம். அவரும் விரைவில் வளைக்கப்படலாம் என்கிறார்கள். இதற்கிடையே, தமிழில் மிரட்டலான படத்தில் நடித்த அந்த ஹீரோயினையும் விசாரிக்க இருக்கிறார்களாம் போலீஸ்.

மிரட்டலான நடிகை
இயக்குனர் ஒருவர் போலீசிடம் கொடுத்த லிஸ்டில், அந்த மிரட்டலான நடிகையின் பெயரும் இருக்கிறது. கடந்த சில மாதங்களுக்கு முன் விபத்தில் சிக்கியவர் அந்த நடிகை. அந்த விபத்துக்கும் போதை மாத்திரை காரணமாக இருக்கலாம் என்கிறார்கள். இந்நிலையில் தன்னையும் போலீஸ் அழைப்பார்கள் என நினைத்த நடிகை, தனக்கு கொரோனா என்று சொல்லி தப்பி விட்டதாகச் சொல்கிறார்கள்.

சாண்டல்வுட்
பத்து நாளுக்குப் பிறகுன்னாலும் விசாரணை இல்லாமலா போயிரும் என்கிறார்கள், கன்னட சினிமாவில். இதற்கிடையே மேலும் சில நடிகர், நடிகைகளும் இதில் சிக்கலாம் என்கிறது சாண்டல்வுட். இந்த விவகாரம் அடுத்து, அப்படி மல்லுவுட்டுக்கும் படையெடுக்கும் என்கிறார்கள். எங்க போய் முடியுமோ? என்கிறார்கள் ரசிகர்கள்.


Click it and Unblock the Notifications











