இங்க கல்யாண பிரச்னை... அங்க முன்னணி ஹீரோவோடு செட்டிலாகிட்டாராமே அந்த ஹீரோயின்!
சென்னை: கல்யாண பிரச்னையில் சிக்கிய அந்த மலையாள நடிகை, அங்கு முன்னணி ஹீரோ ஒருவருடன் செட்டிலாகிவிட்டதாகச் சொல்கிறார்கள்.
தமிழில் அந்த மதுரைக்கார, முருகக் கடவுளின் மற்றொரு பெயரைக் கொண்ட இளம் நடிகருடன் கிராஜூவேட் படத்தில் ஜோடியாக நடித்திருந்தார் அந்த மேனன் நடிகை.

ரகசிய திருமணம்
பிறகு அந்த நடிகருக்கும் அவருக்கும் மலர்ந்தது காதல். காதலை அதிக நாள் நீட்டிக்க விரும்பாமல், திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர் இருவரும். பிறகு இருவீட்டு சம்மதத்துடன் ரகசியமாகத் திருமணம் செய்துகொண்டனர். இதில் இரண்டு குடும்பத்துக்கும் வேண்டிய நெருங்கிய சொந்தங்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.

வாய்ப்புகள் கிடைக்காது
திருமணம் பற்றி வெளியே தெரிந்தால், நடிகைக்கு வாய்ப்புகள் கிடைக்காது என்பதால், ரகசியமாக திருமணம் செய்து கொண்டார்களாம். பிறகு கொஞ்ச நாள் கூட இந்த திருமணம் நீட்டிக்கவில்லை. தன்னைக் காதலித்து திருமணம் செய்து ஏமாற்றி விட்டதாக அந்த நடிகர் புகார் தெரிவிக்க விஷயம் பரபரப்பானது.

பெயரை மாற்றினார்
'அப்படிலாம் இல்ல, நான் அவரை லவ்தான் பண்ணினேன், கல்யாணம் பண்ணலை' என்று நடிகை தரப்பில் இருந்து சொன்னார்கள். போட்டோ ஆதரத்தையெல்லாம் காண்பித்தார் நடிகர். பிறகு விவாகரத்து வழக்குத் தொடரப்பட்டது. பஞ்சாயத்து முடிந்து கேரளாவுக்கு போன நடிகை தன் பெயரை மாற்றிக்கொண்டார். பழைய பேர் என்றால் தெரிந்துவிடும் என்பதால், புதுப்பெயரோடு, அங்கு நடிக்கத் தொடங்கினார்.

நடிகர் புண்ணியத்தில்
அங்கு வெளியான பெரிய சகோதரர் படத்தில் நடித்த அவர், ஒரு முன்னணி நடிகருடன் செட்டில் ஆகிவிட்டாராம். இதையடுத்து அந்த நடிகரின் புண்ணியத்தில் வாய்ப்புகள் அதிகமாக வந்து கொண்டிருப்பதாகப் பேசிக்கொள்கிறார்கள் கோலிவுட்டில். இதற்கிடையே நடிகை தமிழில் ஒரு படத்துக்கு அட்வான்ஸ் வாங்கிவிட்டு போனை எடுக்கவில்லை என்றும் இன்னொரு புகார் கிளம்பியிருக்கிறது.


Click it and Unblock the Notifications











