மட்டையாகிறவரை மது..அணைய அணைய புகை.. லாக்டவுனை அதிலிருந்து விடுபட பயன்படுத்தும் முன்னாள் ஹீரோயின்!

By

சென்னை: அந்த முன்னாள் ஹீரோயின் மது பழக்கத்தை கைவிடுவதற்கு இந்த லாக்டவுன் நேரத்தைப் பயன்படுத்திக் கொள்வதாகச் சொல்கிறார்கள்.

சினிமாவில் நடிகர், நடிகைகள் மது போதையில் புழங்குவது சகஜம். சிலரைத் தவிர பெரும்பாலானவர்கள் மதுவை நாடுவது ஜாலிக்காக.

இப்படி ஆரம்பிக்கும் சிலர், பிறகு அதற்கு முழுவதுமாக அடிமையாகி விடுவார்கள்.

பாலிவுட்டில்

பாலிவுட்டில்

பிறகு அது இல்லாமல் முடியாது என்ற நிலைக்கு வந்து விடுவார்கள். விளைவு தினமும் பார்ட்டி, பாட்டில் என வாழ்க்கை கழியும். பாலிவுட்டில் மதுபழக்கம் நடிகைகளிடம் சர்வ சாதாரணமாக இருக்கிறது. கேரள சினிமாவில் போதை பழக்கம் அதிகரித்துவிட்டதாக பல நடிகர், நடிகைகள் வெளிப்படையாக ஒப்புக் கொண்டிருக்கிறார்கள்.

வீக்கென்ட் பார்ட்டி

வீக்கென்ட் பார்ட்டி

அந்தப் பழக்கம் கோலிவுட்டுக்கு எப்போதோ வந்துவிட்டது. நித்தம் ஒரு பார்ட்டி என சில நடிகைகள் கொண்ட்டாட்டத்தில் இருக்கின்றனர். சிலர் வீக்கென்ட் பார்ட்டிகளில் மட்டும் கலந்துகொள்கின்றனர். சில நடிகைகள், அதிக போதை இல்லாத மதுவகைகளை குடிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஸ்டைல்.

விவாகரத்து

விவாகரத்து

இப்படி கொஞ்சம் கொஞ்சமாக மதுவையும் புகையையும் ஆரம்பித்தவர்தான், அந்த மும்பை நடிகை. அவர் தமிழில் சில முக்கியமான படங்களில் நடித்தார். பிறகு அந்த ஹிட் பட இயக்குனரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இரண்டுபேருமே ஒரே வீட்டில் தண்ணி, சிகரெட் என ஜாலியாக இருக்க, பிறகு என்ன நினைத்தார்களோ, விவாகரத்து பெற்றனர்.

திருமணம்

திருமணம்

பிறகு அந்த இயக்குனர், பெரிய இடத்துப் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு வாழ்ந்து வருகிறார். நடிகை, அடுத்து திருமணம் செய்துகொள்ளவில்லை. தொடர்ந்து படங்களில் நடித்துவரும் அந்த நடிகை, கொஞ்சம் கொஞ்சமாக மதுவுக்கும் புகைக்கும் அடிமையாகி விட்டார் என்கிறார்கள். இது இரண்டும் அவருடன் எப்போதுமே இருக்குமாம்.

வாய்ப்புகள்

வாய்ப்புகள்

பிறகு நடிகைக்கு வாய்ப்புகள் குறைய அக்கா, அண்ணி கேரக்டர்களில் நடிக்கத் தொடங்கினார். இருந்தும் தமிழில் வாய்ப்புகள் அதிகம் இல்லாததால், மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார், இப்போது. அவருக்கு வாய்ப்புகள் குறைவதற்கு மதுபழக்கமும் புகைப் பழக்கமும் காரணம் என்கிறார்கள்.

நடிகை கேரவன்

நடிகை கேரவன்

சில நாட்களில் ஒவர் போதையில், மறுநாள் ஷூட்டிங் வருவதையே மறந்து விடுவாராம்.
எப்போதும் ஊதித்தள்ளும் நடிகையின் கேரவனுக்கு பட்டென்று நுழைந்துவிட முடியாது என்று சொல்கிறார்கள். புகை நாற்றம், குமட்டி எடுக்குமாம். அந்தளவுக்குத் தொடர்ந்து ஊதித் தள்ளிக்கொண்டே இருப்பாராம்.

மதுவை விடுகிறார்

மதுவை விடுகிறார்

இந்நிலையில், இந்த லாக்டவுனை, மதுவில் இருந்து விடுபடுவதற்கான வாய்ப்பாக நினைத்திருக்கிறாராம் நடிகை. அதனால் அவர் யோகாவில் ஈடுபடுவதாகச் சொல்கிறார்கள். சில நடிகைகள் சொன்ன அட்வைஸ் படி, இந்த முயற்சியில் அவர் ஈடுபட்டிருக்கிறாராம். லாக்டவுன் முடிவதற்குள் அவரை புதிய நடிகையாகப் பார்க்கலாம் என்கிறார்கள். பார்ப்போம்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X