கடனை அடைத்து தோழியின் கணவரை வளைத்து போட்ட நடிகை.. கண்ணீரும் கம்பலையுமாக நிற்கும் தோழி!
சென்னை: தோழி என்ற போர்வையில் குடும்பத்திற்குள் நுழைந்து நடிகை, தோழியின் கணவரை வளைத்து போட்டுள்ளார். தற்போது அந்த தோழி கண்ணீரும் கம்பலையுமாக வாழ்ந்து வருகிறார்.
மைதா மாவு போல தேகம் கொண்ட அந்த நடிகை, குழந்தை நட்சத்திரமாக பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரின் அழகான க்யூட்டான சிரிப்பால் இவருக்கு பல படங்களில் வாய்ப்பு கிடைத்தது.
இதையடுத்து பஞ்சாபி, இந்தி போன்ற படங்களில் நடித்து பிரபலம் ஆனார்.

அழகான நடிகை: வெள்ளை நிறம் கொண்ட அந்த நடிகை தமிழில் ஒரு முன்னணி நடிகரின் படத்தில் அறிமுகம் ஆனார். முதல் படம் சுமாராக இருந்த போதும் அடுத்தடுத்த படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அடுத்தடுத்து இரண்டு ஹிட் படங்களாக அமைந்து இவரின் மார்க்கெட் எங்கேயோ சென்றது.
கோட்டை விட்டார்: ஒரு நடிகை பிரபலமாகி விட்டால், அடுத்து கிசுகிசுவில் தான் சிக்குவார். அந்த வகையில் இவரும் சர்ச்சை நடிகருடன் இணைந்து நடித்த போது, அவரை காதலிப்பதாக கிசுகிசுவில் சிக்கினார். இதையடுத்து, திடீரென இருவருக்குள் கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிட்டனர். இதனால், மனவருத்தத்தில் இருந்த வெள்ளை நடிதை படத்தை கோட்டைவிட்டார்.
தோழியின் கணவருடன் நெருக்கம்: மன அழுத்தத்தை குறைக்க வெளிநாட்டுக்கு சுற்றுலா போன அந்த வெள்ளை நிற நடிகை தனது பள்ளி தோழியின் வீட்டில் சில நாட்கள் தங்கினார். அப்போது, தோழியின் குடும்பம் கடனில் இருப்பதை தெரிந்து கொண்டு, தோழியின் மொத்த கடனையம் அடைத்துள்ளார். இந்த நேரத்தில் தோழியின் கணவருக்கும் அந்த வெள்ளை நடிகைக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டுள்ளது.
அத்துமீறினார்: ஏற்கனவே காதல் தோல்வியால் மன அழுத்தத்தில் இருந்த நடிகைக்கு தோழியின் கணவர் ஆறுதலாக பேச மயங்கிப்போன அந்த நடிகை, தோழியின் கணவர் என்றும் பாராமல் அத்துமீறி இருக்கிறார். இந்த விவரம் தோழிக்கு தெரிய வர கணவரை உடனடியாக விவாகரத்து செய்து இருக்கிறார். அவள் விவாகரத்து செய்துவிட்டு போகட்டும் நான் இருக்கிறேன் என்று அவரை உடனே திருமணம் செய்து கொண்டு ஜாலியாக குடும்பம் நடத்தி வருகிறார். ஆனால், தோழியோ கண்ணீரும் கம்பலையுமாக நின்று கொண்டு இருக்கிறார்.


Click it and Unblock the Notifications











