குடும்பத்தில் வறுமை.. பணத்திற்காக அம்மா செய்த வேலை.. கதறி அழுத நடிகை!
சென்னை: குடும்பத்தின் வறுமை காரணமாக பணத்திற்காக அம்மா செய்த கொடுமையால் பிரபல நடிகை பல விதமான கஷ்டத்தை அனுபவித்துள்ளார்.
பணம் என்றால் பிணமும் வாய் திறக்கும் என்ற பழமொழியை கேள்வி பட்டு இருக்கிறோம். ஆனால், பெத்த தாயே பணத்திற்காக மகளை சினிமாவில் தள்ளிவிட்டுள்ளார்.

குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் பலர் நடித்திருக்கிறார்கள். ஆனால், அது கட்டாயத்தால், நடந்து இருக்காது. ஆனால், இந்த நடிகையின் குடும்பத்தினர், வறுமையை காரணம் காட்டி, கட்டாயப்படுத்தி சினிமாவில் நடிக்க வைத்துள்ளனர்.
கொழு கொழு நடிகை: சினிமாவிற்கு கொஞ்சம் கூட தொடர்பு இல்லாத, குடும்பத்தில் இருந்து வந்த இந்த, கொழு கொழு நடிகை நடித்தது என்னமோ ஒருசில படங்கள் தான் என்றாலும், இவருக்கு என்று தனி ரசிகர்கள் இருக்கிறார்கள். 14 வயதிலேயே வசீகரமான அழகுடன் இருந்ததால், குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் நடிக்க வந்தார்.
ஆடம்பர செலவு: முதல் படம் எதிர்பார்த்த வெற்றிப்பெறாததால், பட வாய்ப்பை பெற அடுத்தடுத்த படங்களில் கவர்ச்சியாக நடிக்கவைத்து பணத்தை சம்பாதிக்க வைத்துள்ளார் அவரது அம்மா. சினிமாவில் பலரின் முன் கவர்ச்சியாக ஆட்டம் போட்டு சம்பாதித்த பணத்தில் ஒட்டுமொத்த குடும்பமே, ஆடம்பரமாக செலவு செய்து மகிழ்ச்சியாக வாழ்ந்துள்ளனர்.
படுக்கை அறைகாட்சியில்: ஒரு கட்டத்தில் அம்மாவின் பணத்து ஆசை எல்லை மீறிப்போய், படுக்கை அறை காட்சிகளிலும் நடிக்க வைத்துள்ளார். அந்த காட்சியில் நடிக்க விருப்பம் இல்லை என்று கூறினாலும், குடும்பத்தின் வறுமையை காரணம் காட்டி கட்டாயப்படுத்தி நடிக்கவைத்துள்ளனர். இதனால், மனம் நோத்துப்போன கொழு கொழு நடிகை யாரிடமும் மனம்விட்டு இதை சொல்ல முடியாமல் மனதிற்குள் புழுங்கி உள்ளார்.
ஏடிஎம் மிஷின்: ஒரு கட்டத்தில்,நமக்குனு ஒரு வாழ்க்கை இருக்கு, அந்த வாழ்க்கையை வாழ வேண்டும் என்று நினைத்து, அம்மாவை விட்டு விலகி பாடகர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு, மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். தற்போது, நல்ல கதாபாத்திரத்தை தேர்வு செய்து நடித்து வரும் இவர். என் அம்மா என்னை ஏடிஎம் மிஷினாகத்தான் பார்த்தார் என்று பேட்டி ஒன்றில் கதறி அழுத படி பேசியிருந்தார்.


Click it and Unblock the Notifications











