அவருக்கு 10வது பொண்டாட்டியா கூட இருப்பேன்.. ஓபனா சொன்ன தாராள நடிகை!
சென்னை: தனியார் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான தாராள மனம் கொண்ட நடிகை அவருக்கு 10வது பொண்டாடியாகக்கூட இருப்பேன் என்று கூறியுள்ளார்.
முன்பு எல்லாம் சினிமா நடிகைகளுக்குத் தான் மக்கள் மத்தியில் மவுசு இருந்தது. அதன்பின், விதவிதமாக பல தொலைக்காட்சிகள் வந்த விட்டதால், சின்னத்திரையில் நடிப்பவர்களும், தொகுப்பாளர்களும் பிரபலமானார்கள்.
அப்படி சின்னத்திரையில் தொகுப்பாளினியாக இருந்தவர்தான் இந்த தாராள மனசு கொண்ட நடிகை.

கணவரை பிரிந்தார்: ஆரம்பத்தில் பல்வேறு தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக இருந்த இவர், தனது திறமையால் ஒரு சில சீரியல்களில் நடித்தார். அதன்பிறகு திருமணம் செய்து கொண்டு சீரியல் பக்கம் தலைகாட்டாமல் இருந்த இவர், ஒரு மகன் பிறந்த நிலையில், கணவருடன் கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிட்டார். தற்போது மகனுடன் வசித்து வரும் இவர் சின்னத்திரையிலோ, சினிமாவிலோ ஏதாவது வாய்ப்பு கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று காத்திருந்தார்.
ஓப்பனாக பேசிய நடிகை: அந்த நேரத்தில் தான், பெரிய நடிகரின் படத்தில் நடிக்கும் வாய்ப்பு ஒன்று வந்தது. கதாநாயகன் யார் என்று சொன்னதும் எதைப்பற்றியும் யோசிக்காமல் ஒகே சொல்லிவிட்டாராம், படப்பிடிப்பின் போது தான், அந்த பிரபலமான நடிகருக்கு மூன்றாவது மனைவியாக நடிக்க வேண்டும் என்பது தெரியவந்துள்ளது. இதைகேட்டு அந்த தாராள மனசு கொண்ட நடிகை, அந்த பிரபலத்திற்கு மூன்றாவது மனைவி என்ன அவர் ஓகே சொன்னா, 10வது பொண்டாடியாக்கூட இருப்பேன் என ஓப்பனாக கூறினாராம் அந்த நடிகை. இதை கேட்டுக்கொண்டிருந்த அந்த பிரபல நடிகரே வெட்கப்பட்டுக்கொண்டு என்னடா இது வம்பாபோச்சு என்று அந்த இடத்தை விட்டு கிளம்பி உள்ளார்.
நடிகைக்கு கட்டம் சரியில்லை: இந்த படத்திற்கு பிறகு நடிகைக்கு படவாய்ப்பு தேடி வரவில்லை என்ற போதும், இந்த நடிகைக்கு பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்காமல், ஓவராக பேசி நிகழ்ச்சியில் இருந்து பாதியில் வெளியேறினார்.


Click it and Unblock the Notifications











