'பேருதான் அப்படியாம்... மத்தபடி ம்ஹூம்...' அந்த ஹீரோயின் பற்றி இப்படி சொல்றாங்களே?
சென்னை: அந்த டாப் ஹீரோ பட ஹீரோயின் பற்றி கோடம்பாக்கத்தில் இப்படி சொல்கிறார்கள்.
உச்ச நடிகரின் படத்தில் சின்ன கேரக்டரில் நடித்திருந்தார், மும்பையில் பிறந்து வளர்ந்த அந்த கேரள நடிகை.
அப்பாவின் பெயரை தன் பெயரோடு இணைத்து இருக்கிற அந்த நடிகைக்கு அந்த படத்தில் திறமை காட்ட அதிக வேலை இல்லை.

ஆன்லைன் ரசிகர்கள்
இதற்கு முன் இந்தி மற்றும் மலையாள படங்களில் நடித்திருப்பதால், சிறப்பாக நடிப்பார் என்று சொன்னார்கள். ஆனால், சொன்னதற்கு மாறாக இருக்கிறதாம் நடிகையின் வேலை. அடிக்கடி, கொஞ்சம் ஹாட்டான போட்டோக்களை இன்ஸ்டாவில் போட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார், அந்த நடிகை. இதனால் ஆன்லைன் ரசிகர்கள் அவருக்கு அதிகம்.

வழக்கமான காதல்
இதனால் எப்போதும் ஃபோனும் போட்டோவுமாக இருக்கும் நடிகை, உச்ச நடிகர் படத்தில் நடித்திருந்ததால் அவருக்கு நல்ல பெயர். அவர் அப்படியாங்கும் இப்படியாங்கும் என்று என்று ஓவர் பில்டப் வேறு. இதனால், அதை நம்பி, டாப் ஹீரோ படத்தில் ஹீரோயின் ஆக்கினார்களாம் அவரை. கதைப்படி, இந்தப் படத்திலும் நடிகைக்கு அதிக வேலை இல்லை என்கிறார்கள்.

சரியாக வரவில்லை
வழக்கமான காதல் காட்சிகள்தானாம். அதுவும் அதிகமாக இல்லையாம். ஆக்ஷன் காட்சிகளில் ஹீரோவுடன் நடிகையும் இருக்கிறாராம். அவ்வளவுதானாம். இந்நிலையில் படத்தின் காட்சிகளில் நடிக்க நடிகை அதிக டைம் எடுத்துக் கொள்கிறாராம். அதோடு அதிக டேக்குகள் வாங்கினார் என்கிறார்கள். இருந்தும் நடிப்பு இன்னும் சரியாக வரவில்லையாம்.

இரண்டு நாள் மட்டும்
இதுக்கா, இவ்வளவு பில்டப் என்கிறார்கள், படத்தில் பணியாற்றியவர்கள். நடிகை தொடர்பான காட்சிகள் இன்னும் இரண்டு நாள் மட்டுமே இருக்கிறதாம். அதோடு அந்த கிளாமர் நடிகைக்கு குட்பை சொல்ல இருக்கிறார்கள். படத்தின் ஒரு பாடல் வெளியாகி ஹிட்டாகி இருக்கிற நிலையில், படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறதாம்.


Click it and Unblock the Notifications