ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்ட அம்மா.. குடும்பத்திற்காக ஓடாய் தேய்ந்த நடிகை.. கடைசியில் எல்லாமே போச்சு!
சென்னை: சினிமா என்பது பணம் கொட்டும் இடமாக இருப்பதால், பலரும் சினிமாவில் நுழைந்து எப்படியாவது பணத்தை அள்ளிவிட வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால், அதில் ஜெயிப்பது அவ்வளவு சாதாரணமான விஷயம் இல்லை என்பது அதில் தோற்றுப் போனவர்களுக்கு மட்டும் தான் தெரியும். பணத்தாசையால் ஆடம்பரமாக வாழ ஆசைபட்ட நடிகையின் அம்மாவால் பிரபல நடிகை பல விதமான கஷ்டத்தை அனுபவித்துள்ளார்.
பணம் என்றால் பிணமும் வாய் திறக்கும் என்ற பழமொழியை நாம் கேள்வி பட்டு இருக்கிறோம். ஆனால், பெத்த தாயே பணத்திற்காக மகளை சினிமாவில் தள்ளிவிட்டார் என்பதை மனம் ஏற்க மறுக்கிறது. அழகான க்யூட்டான நடிகை நன்றாக படித்துக்கொண்டிருந்த போது, குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் நடிக்க வந்தார். அவர் நடித்த முதல் படமே வெற்றி பெற்று விட்டதால் தொடர்ந்து அவருக்கு படவாய்ப்பு வர படிப்பு பறிபோய்விட்டது.

கொழு கொழு நடிகை: சினிமாவிற்கு கொஞ்சம் கூட தொடர்பு இல்லாத, குடும்பத்தில் இருந்து வந்த இந்த, கொளு கொளு நடிகை நடித்தது என்னமோ ஒருசில படங்கள் தான் என்றாலும், இவருக்கு என்று தனி ரசிகர்கள் இருக்கிறார்கள். வசீகரமான அழகுடன் இருந்ததால், கணிசமான படவாய்ப்புகள் வந்தன. ஆனால், பெயர் சொல்லும் அளவிற்கு இல்லை.
ஆடம்பர செலவு: இவர் நடித்த படம் எதிர்பார்த்த வெற்றிப்பெறாததால், பட வாய்ப்பை பெற அடுத்தடுத்த அம்மாவின் கட்டளைப்படி படங்களில் கவர்ச்சியாக நடிக்க தொடங்கினார். படத்தில் நடித்தால் மட்டும் போதாதுன்னு அட்ஜெஸ்ட்மெண்டும் செய்ய வேண்டும் என கேட்க, அம்மா அனைத்துக்கும் ஓகே சொல்ல அப்போது தான், நடிகைக்கு அம்மாவின் உண்மை தெரிந்து மனம் உடைந்து என்ன செய்வது என்று தெரியாமல் பறிதவித்துள்ளார்.
எல்லை மீறிய பணத்தாசை: கொழு கொழு நடிகை சினிமாவில் பலரின் முன் கவர்ச்சியாக ஆட்டம் போட்டு சம்பாதித்த பணத்தில் ஒட்டுமொத்த குடும்படும், ஆடம்பரமாக செலவு லக்ஸுரியாக வாழ்ந்துள்ளனர். ஒரு கட்டத்தில் அம்மாவின் பணத்தாசை எல்லை மீறிப்போய், படுக்கை அறை காட்சிகளிலும் நடிக்க வைத்துள்ளார். அந்த காட்சியில் நடிக்க விருப்பம் இல்லை என்று கூறினாலும், குடும்பத்தின் வறுமையை காரணம் காட்டி கட்டாயப்படுத்தி நடிக்கவைத்துள்ளனர்.
கதறி அழுத நடிகை: ஒரு கட்டத்தில்,நமக்குனு ஒரு வாழ்க்கை இருக்கு, அந்த வாழ்க்கையை வாழ வேண்டும் என்று நினைத்து, அம்மாவை விட்டு விலகி சினிமா பாடகர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு, மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். தற்போது, நல்ல கதாபாத்திரத்தை தேர்வு செய்து நடித்து வரும் இவர். என் குடும்பமே என்னை பணத்தை சம்பாதித்து கொடுக்கும் ஏடிஎம் மிஷினாகத்தான் பார்த்தார்கள், எனக்கு என்று ஒரு மனசு இருப்பதை யாரும் புரிந்து கொள்ளவில்லை என பேட்டி ஒன்றில் கதறி அழுது பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











