Gossip : திருமணத்திற்கு முன் பல நடிகர்களுடன் கிசுகிசுவில் சிக்கிய நடிகை… ஒல்லி நடிகரால் வந்த பிரச்சனை!
சென்னை : வசீகரமான முகம் கொண்ட அந்த நடிகை திருமணத்திற்கு முன் பல நடிகர்களுடன் கிசுகிசுவில் சிக்கி பெயரை கெடுத்துக்கொண்டார்.
சினிமாத்துறை என்றாலே கிசுகிசுக்கு குறைவே இருக்காது, அதுவும் தொடர்ந்து ஒரே நடிகருடனோ, நடிகையுடனோ நடித்துவிட்டால், சோஷியல் மீடியாவில் புது புது வதந்திகள் வந்து கொண்டே இருக்கும்.

காதல் கிசுகிசு : அதே போலத்தான் வசீகரமான முகம் கொண்ட அந்த நடிகை தனது, அழகாலும் திறமையாலும் மக்களின் மனதில் இடம் பிடித்து அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தம் ஆனார். முதல் படத்தில் பிரகாசமான நடிகருடன் நடித்திருந்தார். அந்த படம் வெற்றி பெற, பொருத்தம் பக்காவாக இருக்கு என்று அடுத்தடுத்த படங்களில் அவருடன் ஜோடி போட்டு நடித்ததால், இருவரும் காதலிப்பதாக கிசுகிசு எழுந்தது.
டான்ஸ் நடிகருடன் காதல் : இதன் பிறகு அழகான நடிகர், முத்த நடிகர், டான்ஸ் நடிகர், சர்ச்சை நடிகர்களின் படங்களில் ஓவர் கவர்ச்சி காட்டாமல் குடும்பபாங்கான கதாபாத்திரத்தில் நடித்து பெயர் எடுத்தார். ஆனால், அப்போதும் டான்ஸ் நடிகருடன் ஒரு படத்தில் கவர்ச்சி ரூட்டுக்கு மாறி, அவருடன் நெருக்கமாக இருந்து குத்தாட்டம் போட்டதால் அவருடன் காதல் கிசுகிசுவிலும் சிக்கினார்.

பெயரை கெடுத்துக்கொண்டார் : இதையடுத்து, அந்த வசீகரமான நடிகை ஒல்லி நடிகருடன் ஒரு படத்தில், ஏடாகூடமான கதாபாத்திரத்தில் நடித்து பெயரை கெடுத்துக்கொண்டார். அந்த படம் பிளாக் பஸ்டர் ஹிட்டடித்த போதும், ஒல்லி நடிகருடன் நடித்த பிறகு அந்த நடிகைக்கு படவாய்ப்பே இல்லாமல் போனது. இதன்பிறகு ஒல்லி நடிகரை வசீகரமான நடிகை காதலிப்பதாகவும் கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டது.
காதல் திருமணம் : வசீகரமான நடிகை யாருடன் சேர்ந்து நடித்தாலும், அவருடன் காதல் என்று கிசுகிசுக்கப்பட்டார். இதையடுத்து தன்னுடன் இணைந்து நடித்த க்யூட்டான நடிகரை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார். தற்போதும், வசீகரமான நடிகை படங்களில் நடித்தாலும், திருமணமாகி குழந்தை பிறந்துவிட்டதால், கிசுகிசுவில் தப்பித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











