சரக்கடித்துவிட்டு நடுரோட்டில் ஆட்டம் போட்ட நடிகை.. அலேக்காக தூக்கி வீட்டில் விட்ட நடிகர்!

By Staff

சென்னை: நன்றாக தமிழ் பேசத் தெரிந்த தமிழ் நடிகையான இவர், சரக்கு அடித்துவிட்டு அலப்பறை செய்து நடுரோட்டில் ஆட்டம் போட்டுள்ளார்.

ஆண் என்ன.. பெண் என்ன எல்லாம் ஓர் இனம் தான் என்பதுபோல.. இந்த காலத்து பெண்களும் சரக்கு அடிக்கத் தொடங்கிவிட்டனர்.

அதுவும் சினிமாத்துறையில் இதற்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதால் நடிகர்களுக்கு இணையாக நடிகைகளும் பப் மற்றும் பார்ட்டி என சரக்கு அடித்து வருகின்றனர்.

The actress who was drunk and danced on the road

முன்னணி நடிகை: சென்னையில் பிறந்த அழகான க்யூட் நடிகையான இவர், தமிழ் சினிமாவில் கஷ்டப்பட்டுத்தான் நடிக்க வந்தார். இவரின் அழகான சிரிப்பு, எக்ஸ்பிரஷன் என அனைத்துக்கும் ரசிகர்கள் அடிமையாகிப்போனதால், அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி போட்டு நடித்து, முன்னணி நடிகை என பெயர் எடுத்துள்ளார்.

அலப்பறை கொடுத்த அம்மணி: அம்மணி ஒருமுறை ரயிலில் சரக்கு, தம் அடித்தது மிகப்பெரிய சர்ச்சைக் குள்ளானதால், இனிமேல் வெளியிடத்தில் தண்ணி அடிக்க மாட்டேன் என சபதம் எடுத்து விட்டு வீட்டிலேயே பார் செட்டப்பை வைத்துக்கொண்டு நண்பர்களுடன் அலப்பறை செய்து வந்தார். இந்த வீடியோவும் இணையத்தில் வெளியாகி பலரும் நடிகையை கழுவி ஊற்றினார்கள்.

ஓவர் சரக்கு: இதையடுத்து கொஞ்ச நாள் சர்ச்சையில் சிக்காமல் இருந்த அந்த அழகு நடிகை, தனக்கு பிடித்தமான ஆண் நண்பருடன் கழுத்துமுட்ட குடித்துள்ளார். நண்பர் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் ஓவர் மப்பில், பாரிலேயே பிளாட்டாகிவிட, நண்பருக்கு என்ன செய்வது என்று தெரியாமல் காரில் தூக்கிப் போட்டுக்கொண்டு நடிகையின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

நடுரோட்டில் ஆட்டம்: காரை வீட்டு வாசலில் இறக்கிவிட்டால், போதை தலைக்கு ஏறிய அந்த அழகு நடிகை நடுரோட்டில் ஆட்டம் போட்டுள்ளார். அதன் பிறகு வீட்டின் காவலாளியை அழைத்து எப்படியோ அந்த நடிகர் அவரை வீட்டில் விட்டு விட்டு திரும்பி இருக்கிறார். பொழுது விடிந்து போதை குறைந்த பிறகுதான் அம்மணிக்கு இந்த விவகாரம் நினைவுக்கு வந்து நாளை முதல் குடிக்க மாட்டேன் சத்தியமடி தங்கம் என சபதம் செய்துள்ளாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X