முதல் நாள் காதலன்.. அடுத்த நாள் பெஸ்டி.. ஓட்டலில் அட்டகாசம் செய்த நடிகை!
சென்னை: சினிமாவில் ஒரு நடிகருடன் இரண்டு மூன்று படத்தில் சேர்ந்து நடித்துவிட்டால், உடனே அந்த நடிகருக்கும் நடிகைக்கும் காதல் என்று பேசுவது தவிர்க்க முடியாத ஒன்று தான். ஆனால், தொடர்ந்து இரண்டு படத்தில் சேர்ந்து நடித்த இரண்டு பெரிய நடிகர்களை ஒரே நேரத்தில் காதலித்துள்ளார் திம்சுகட்டை நடிகை.
மும்பையில் சினிமா விநியோகஸ்தரின் மகளான பிறந்தவர் தான் அந்த திம்சுகட்டை நடிகை. சினிமா பின்னணி கொண்ட குடும்பம் என்பதால், சினிமாவில் ஒரு இடத்தை பிடிக்க நடிகைகள் என்ன எல்லாம் செய்ய வேண்டும் என்று அவருக்கு தெரிந்து இருந்ததால், தனது மகள் சினிமாவிற்கு வரக்கூடாது என்று தடுத்தார். ஆனால், இவை அனைத்தையும் மீறித்தான் திம்சுகட்டை நடிகையின் அக்காவும் சினிமாவில் நடிக்க வந்தார் தங்கையும் நடிகையானார்.

முதல் படத்தில் காதல்: இந்த திம்சுகட்டை நடிகை முதன் முதலில் பாலிவுட் படத்தில் தான் நடித்தார். அதன் பிறகு தமிழில் அறிமுக இயக்குநர் ஒருவர் படத்தில் ஒரு சின்ன ரோலில் நடித்தார். அதன்பிறகு வெளிச்ச நடிகருடன் நடித்த போது அவரை காதலித்தார். இந்த விஷயம் கோடம்பாக்கத்திற்கே தெரியும். ஆனால் பலருக்கும் தெரியாத தகவல் என்னவென்றால், அந்த வெளிச்ச நடிகரை காதலித்துக்கொண்டு இருந்த அந்த நேரத்திலேயே அந்த திம்சுகட்டை நடிகை, வேறு ஒரு பிரபலமான வாட்டசாட்டமான நடிகருடனும் ரிலேஷன்ஷிப்பில் இருந்தார்.
ஓவர் கவர்ச்சி ஆட்டம்: வாட்டசாட்டமான நடிகருடன் படத்தில் நடித்த போது, திம்சுகட்டை நடிகைக்கு அவரையும் பிடித்துப்போனதால் இவரையும் காதலித்து வந்துள்ளார். இந்த நேரத்தில் சிங்கப்பூரில் கலைநிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ளுமாறு வாட்டசாட்டமான நடிகர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதை ஏற்றுக்கொண்ட திம்சுகட்டை, அந்த கலை நிகழ்ச்சியில் அவருடன் சேர்ந்து செம ஆட்டம் போட்டு இருக்கிறார்.
கெஞ்சிய நடிகை: இந்த நேரத்தில் திம்சுகட்டை நடிகைக்கு பிறந்த நாள் வர, வெளிச்ச நடிகர் 12 மணிக்கு முன்பாகவே ஓடோடி வந்து அவருடன் ஒரே அறையில் இருந்துவிட்டு வாழ்த்து சொல்லி சென்று இருக்கிறார். வெளிச்ச நடிகர் சென்றதும், அந்த வாட்டசாட்டமான நடிகர் வந்து இருவரும் ஒரே அறையில் தங்கி இருக்கின்றனர். இந்த விஷயம் வெளிச்ச நடிகருக்கு தெரியவர, அவர் காதலி திம்சுகட்டை நடிகருக்கு போன் போட்டு, இன்னைக்கு நானா அவனா என்று பார்த்துவிடுகிறேன் என்று சொல்ல பயந்து போன நடிகை வாட்டசாட்டமான நடிகரின் காலில் விழுந்து கெஞ்சி அவரை ரூமில் இருந்து வெளியே அனுப்பி இருக்கிறார்.
காதல் திருமணம்: அதன் பின் தேடி வந்த காதலனிடம், அவர் பிறந்த நாள் வாழ்த்து சொல்ல வந்தார் என்று சொல்லி, நீலி கண்ணீர் வடித்து அவரை நம்பவைத்துள்ளார். திம்சுகட்டை நடிகை மீது தீராத காதலில் இருந்த அந்த வெளிச்ச நடிகரும் அதை உண்மை என நம்பினார். இந்த பிரச்சனைக்கு பிறகும் திம்சுகட்டை நடிகை, வாட்டசாட்டமான நடிகரின் படத்தில் நடித்தார். இதைப்பார்த்த வெளிச்சம் நடிகர் இப்படியே போனால் சரிப்பட்டு வராது என்று அந்த நடிகையை திருமணம் செய்து கொண்டு சினிமாவிற்கு தலைகாட்டாமல் பார்த்துக்கொண்டார்.ஆனால், அந்த அம்மணி மீண்டும் சினிமாவில் நடித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











