Gossip: பல நடிகர்களுடன் கிசுகிசுவில் சிக்கிய நடிகை.. ஒல்லி நடிகரால் பறிப்போன படவாய்ப்பு!
சென்னை: சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகள் கிசுகிசுவில் சிக்கி சின்னாபின்னமாகி விடுவார்கள். இந்த கிசுகிசுவே பின்னாளில், அவர்களின் வளர்ச்சிக்கு தடையாக அமைந்து விடும். அப்படியான சினிமாவில் வளர்ந்து வந்த வசீகரமான முகம் கொண்ட அந்த நடிகை திருமணத்திற்கு முன் பல நடிகர்களுடன் கிசுகிசுவில் சிக்கி பெயரை கெடுத்துக்கொண்டார். சினிமாவை விட்டு காணாமலே போய்விட்டார்.
திரைத்துறை என்றாலே கிசுகிசு இருக்கும், அதுவும் தொடர்ந்து ஒரே நடிகருடனோ, நடிகையுடனோ சேர்ந்து நடித்துவிட்டால், அந்த நடிகை தான் வேண்டும் என்று அடம்பிடித்தார் என்று பத்திரிக்கைகளில் புது புது வதந்திகள் வந்து கொண்டே இருக்கும்.

அதே போலத்தான் வசீகரமான முகம் கொண்ட அந்த நடிகை தனது, அழகாலும் திறமையான நடிப்பாலும் மக்களின் மனதில் இடம் பிடித்து அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வந்தார். முதல் படத்தில் பிரகாசமான நடிகருடன் நடித்திருந்தார். அந்த படம் சுமாராக இருந்தாலும், நடிகையின் அழகு தமிழ் ரசிகர்களுக்கு பிடித்துப்போக அடுத்தடுத்த படங்களில் அவருடன் ஜோடி போட்டு நடித்தார். இதனால், இருவரும் காதலிப்பதாகவும், ஊர் சுற்றுவதாகவும் கிசுகிசுக்கள் பரவின.
டான்ஸ் நடிகருடன் காதல் : இதன் பிறகு அழகான நடிகர், முத்த நடிகர், டான்ஸ் நடிகர், சர்ச்சை நடிகர்களின் படங்களில் ஒவர் கவர்ச்சி காட்டாமல், புடவையை இழுத்து கட்டிக்கொண்டு குடும்பபாங்கான கதாபாத்திரத்தில் நடித்து பெயர் எடுத்தார். ஆனால், டான்ஸ் நடிகருடன் ஒரு படத்தில் கவர்ச்சி குத்தாட்டம் போட்டு கவர்ச்சி ரூட்டுக்கு மாறினார். அதுவரை கவர்ச்சிக்கு நோ சொல்லிக்கொண்டிருந்த அந்த வசீகரமான நடிகை இந்த டான்ஸ் நடிகருக்காக கவர்ச்சியை அள்ளி வீசியதால், அவருக்கும் இவருக்கும் காதல் என கிசுகிசுவிலும் சிக்கினார்.
பெயரை கெடுத்துக்கொண்டார் : இதையடுத்து, அந்த வசீகரமான நடிகை ஒல்லி நடிகருடன் ஒரு படத்தில், ஏடாகூடமான கதாபாத்திரத்தில் நடித்து பெயரை கெடுத்துக்கொண்டார். அந்த படம் பிளாக் பஸ்டர் ஹிட்டடித்த போதும், ஒல்லி நடிகருடன் நடித்த பிறகு அந்த நடிகைக்கு படவாய்ப்பே இல்லாமல் போனது. இதன்பிறகு ஒல்லி நடிகரை வசீகரமான நடிகை காதலிப்பதாகவும் கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டது. இதற்கிடையில் இந்த நடிகைக்கு நிச்சயமும் நடந்து அது பாதியில் புட்டுக்கொண்டு சென்றுவிட்டது.
காதல் திருமணம்: வசீகரமான நடிகை யாருடன் சேர்ந்து நடித்தாலும், அவருடன் காதல் என்று கிசுகிசுக்கப்பட்டார். இதையடுத்து தன்னுடன் இணைந்து நடித்த க்யூட்டான நடிகரை திருமணம் செய்து கொண்டு செட்லாகிவிட்டார். தற்போதும், சினிமாவில் அவ்வளவாக தலைகாட்டவில்லை என்றாலும், தொலைக்காட்சிகளில் அவரை பார்க்க முடிகிறது. இந்த வசீகரமான நடிகைக்கு திருமணமாகி குழந்தை பிறந்துவிட்டது. ஆனாலும் சினிமாவிற்கு வந்ததில் இருந்து தற்போது வரை இவர் குறித்த கிசுகிசுக்கள் அவ்வப்போது வந்து கொண்டுதான் இருக்கிறது.


Click it and Unblock the Notifications











