புண்ணியமாப் போகும்.. பேசாம இருங்கப்பா.. ரசிகர்களுக்கு "தளபதி"யின் அன்புக் கட்டளை!
சென்னை: தமிழ்நாட்டில் நெருங்கி வரும் தேர்தல் அந்தத் தளபதி நடிகரின் மனதில் மிகவும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறதாம்.
இதனால் தனது அன்பு ரசிகர்களுக்கு மறந்தும் இதை செய்ய வேண்டாம் என்று தளபதி நடிகர் சில கட்டளைகள் இட்டிருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றன.

அந்தக் கட்டளைகளில் தேவையில்லாத வாசகங்கள் மற்றும் வசனங்கள் அடங்கிய போஸ்டர்கள், பேனர்கள் வைக்கக் கூடாது.அப்படி, இப்படி என்று உதார் விட்டுப் பேசுவது கூடாது.
முக்கியமாக ஆளுங்கட்சியை எந்தக் காரணம் முன்னிட்டும் வம்பிழுக்கக் கூடாது ஆகியவை சில முக்கியமான கட்டளைகளாம்.
என்ன காரணம் என்று விசாரித்தால் எல்லாம் அந்த இரண்டெழுத்துப் படம் படுத்தும் பாடுதான் என்கிறார்கள். ஏப்ரல் மாதம் படம் திரைக்கு வருகிறது.
அந்த நேரத்தில் ஏதாவது ஒரு காரணத்தால் படத்திற்கு பிரச்சினை வந்துவிடுமோ? தனது முந்தைய படங்களைப் போல இப்படமும் பிரச்சினையில் சிக்கிக் கொள்ளுமோ என்றெல்லாம் நடிகர் பயப்படுகிறாராம்.
அதன் வெளிப்பாடாகத் தான் இந்தக் கட்டளைகள் என்று விவரம் தெரிந்தவர்கள் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











