பதிலுக்கு பதில்.. நானும் மறுமணம் செய்வேன்.. சவால் விட்ட மாஜி மனைவி !

By Staff

சென்னை : இசையமைப்பாளர் ஒருவர் சமீபத்தில் இரண்டாவது திருமணம் செய்தது குறித்த செய்தி இணையத்தில் மிகப்பெரிய அளவில் பரப்பை கிளப்பியது.

விவகாரத்து தீர்ப்பு வந்த ஒரு சில மாதத்தில் இசையமைப்பாளர் திருமணம் செய்து கொண்டது குறித்து அவரது மாஜி மனைவி பரபரப்பான கருத்துக்களை இணையத்தில் தெரிவித்து வருகிறார்

ஏட்டிக்கு போட்டியாக அவரும் மறுமணம் செய்து கொள்வேன் என கூறியதாக கூறிய தகவல் பெரும் புயலை கிளப்பி உள்ளது.

விவாகரத்து

விவாகரத்து

தமிழ் சினிமாவின் முன்னண இசையமைப்பாளர் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்தார். கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு மேல் சேர்ந்து வாழ்ந்து வந்த அந்த தம்பதியினருக்கு கடந்த நவம்பர் மாதம் முறைப்படி விவாகரத்து கிடைத்தது. இது திரைத்துறையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

மறுமணமா?

மறுமணமா?

இதையடுத்து, அந்த இசையமைப்பாளர் கடந்த வாரம் மறுமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்தில் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே உடன் இருந்தார். இசையமைப்பாளரின் திருமண புகைப்படம் இணையத்தில் வெளியானது. விவாகரத்தான இரண்டு மாதத்திற்குள் மறுமணமா? என பலர் அவரை கேள்வி கேட்டனர்.

பதிலுக்கு பதில்

பதிலுக்கு பதில்

இசையமைப்பாளரின் முன்னால் மனைவியும், இந்த திருமணத்திற்கு வாழ்த்து தெரிவித்துவிட்டு. திருமணத்திற்கு அவ்வளவு என்ன அவசரம் என்றும், குழந்தைகளை சரியாக கவனித்துக்கொள்ளவில்லை என்று சரமாரியாக ட்விட்டரில் கேள்விகளால் தனது கோவத்தை வெளிப்படுத்தி இருந்தார். மேலும், இசையமைப்பாளருக்கு சவால் விடும் வகையில், நானும் மறுமணம் செய்து கொள்வேன் என்றும் தேவைப்பட்டால் குழந்தையும் பெற்றுக்கொள்வேன் என கூறியதாக கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

நிச்சயம் தண்டனை உண்டு

நிச்சயம் தண்டனை உண்டு

மாஜி மனைவி கூறியதாக பரவி வரும் இந்த தகவலுக்கு பலர் ஆதரவு தெரிவித்தாலும், ஒரு சிலர் ஆத்திரத்தில் இதுபோன்ற ஒரு முடிவை எடுக்காதீர்கள் உங்கள் குழந்தைகளுக்காக வாழுங்கள். தவறு செய்தவர்களுக்கு நிச்சயம் தண்டனை கிடைக்கும் என்று கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X