அவ்வளவு ஒத்துமையா இருந்தாங்க... இப்ப அண்ணன் என்னடா, தம்பி என்னடான்னு மாறிட்டாங்களாமே... நெசம்தானா?

By

சென்னை: ஒற்றுமையாக இருந்த அண்ணன் தம்பிக்குள், இப்போது அப்படியொரு பிரச்னை என்கிறார்கள் கோலிவுட்டில்

அண்ணன் இயக்கத்தில்தான் ஹீரோவாக அறிமுகமானார் அந்த தம்பி. தொடர்ந்து சில ரீமேக் படங்களை இயக்கினார் அண்ணன்.

அந்தப் படங்களில் எல்லாம் தம்பிதான் ஹீரோ. படங்கள் ஹிட்டாகின. அப்பா, அந்தப் படங்களைத் தயாரித்தார்.

காதல் திருமணம்

காதல் திருமணம்

அவர்களைக் கண்டால், அண்ணன், தம்பின்னா இப்படித்தாம்யா இருக்கணும் என்று பேசிக்கொள்வார்கள் சினிமாவில். யார் கண்பட்டதோ தெரியவில்லை. அண்ணன் தம்பிக்குள் திடீர் விரிசலாம். தம்பி, காதலித்து திருமணம் செய்துகொண்டார், தயாரிப்பாளர் மகளை. தொடர்ந்து அண்ணன் இயக்கத்தில் நடித்து வந்த தம்பியின் வாழ்க்கை சுமூகமாகத்தான் போய்க்கொண்டிருந்தது.

அடுத்த பாகம்

அடுத்த பாகம்

தம்பியை வைத்து சில வருடங்களுக்கு முன் அண்ணன் இயக்கிய சோல்ஒன் படம் ஹிட்டானதால் அதன் அடுத்த பாகத்தை எடுக்கத் திட்டமிட்டிருந்தார் அண்ணன். தம்பியும் கால்ஷீட் தருவதாகச் சொல்லி இருந்தார். தம்பியின் மாமனார் குடும்பம் சீரியல்கள் தயாரித்து வருகிறது. இதைத் தொடர்ந்து சினிமா படத்தயாரிப்பிலும் இறங்கிவிட்டது.

இழுக்கிறாராம்

இழுக்கிறாராம்

இதனால், தம்பி அந்த நிறுவனத்துக்கு கால்ஷீட் கொடுத்து வருகிறாராம். கேட்டால், இப்போது அப்போது என இழுக்கிறாராம். தம்பிக்கு காத்திருந்த அண்ணன் பொறுத்துப் பொறுத்துப் பார்த்து வெறுத்துப் போனாராம். இதையடுத்து இனியும் தனது தம்பிக்கு காத்திருக்க வேண்டாம் என்று, இந்திப் படம் ஒன்றின் ரீமேக்கை இயக்கச் சம்மத்திருக்கிறார் அண்ணன்.

இப்போது இல்லை

இப்போது இல்லை

இந்தியில் ஹிட்டான அந்தப் படத்தில் வேறு ஹீரோ நடிக்கிறார். இதன் ஷூட்டிங் அடுத்த மாதம் தொடங்க இருக்கிறது. இதனால் அந்த சோல்ஒன் படத்தின் அடுத்த பாகம் இப்போதைக்கு நடக்காது என்கிறார்கள் கோலிவுட்டில். அண்ணன் தம்பிக்கு உதாரணமா இருந்தவங்க, இப்ப இப்படி ஆயிட்டாங்களே என்று கவலையோடு பேசிக் கொள்கிறார்கள் கோலிவுட்டில்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X