யாரா இருந்தா எனக்கென்ன? பெரிய இயக்குனரின் மூக்கை உடைத்த நடிகை.. அப்செட்டான டைரக்டர்!

சென்னை: தமிழ் சினிமாவில் அனைவரும் கொண்டாடக் கூடிய பிரபல இயக்குநர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரலாற்று பின்னணி கொண்ட கதையை இயக்கி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். அந்த படத்தை தொடர்ந்து தற்போது, அவர் புது படத்தை இயக்க இருக்கும் நிலையில், அந்த படத்தில் வளர்ந்து வரும் நடிகை கமிட் செய்ய பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார். ஆனால், அந்த நடிகையின் செயலால் பெரிய இயக்குநர் அப்செட்டாகி இருக்கிறார்.

வெள்ளையா, ஒல்லியா தேகம் கொண்ட அந்த நடிகை அண்மையில் நடித்த அனைத்து படங்களில் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றன. அடுத்தடுத்து படங்களின் வெற்றியால் இந்த நடிகைக்கு என்று தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது. சாதாரண குடும்பத்தை சேர்ந்த இவர், டிவி நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமாகி, தனது தனித்துவமான திறமையால் இன்று முன்னணி நடிகையாக வளர்ந்து, தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.

tamil cinema kisu

திறமையான நடிகை: தனது திறமை மீது நம்பிக்கை கொண்ட இந்த ஒல்லி பெல்லி நடிகை, படவாய்ப்பு வருகிறது, பணம் வருகிறது என்பதற்கான எந்த படத்திலும் கமிட்டாகாமல், தனக்கு வரும் கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். அண்மையில் இவர் நடிப்பில் வெளியான திரைப்படத்தில், இந்த நடிகையின் நடிப்பை அனைவரும் வியந்து பாராட்டினார்கள். அந்த அளவிற்கு கதைகளை உள்வாங்கி நடிக்கும் இந்த நடிகை தமிழ் மற்றும் பாலிவுட் சினிமா கொண்டாடும் ஒரு இயக்குநரின் படத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியானது. இதனால், அந்த நடிகையின் ரசிகர்கள் மகிழ்ச்சி இருந்துள்ளனர்.

கடுப்பான இயக்குநர்: ஆனால், நடிகையோ பெரிய இயக்குநரிடம் கதை என்ன... அதை கேட்டுத்தான் நான் முடிவு செய்ய முடியும் என கதையை சொல்லும்படி கேட்டுள்ளார். தமிழ் சினிமாவில் மற்ற நடிகர்கள், அந்த பெரிய இயக்குநரிடம் இருந்து அழைப்பு வராதா என காத்துக்கொண்டு இருக்கும் நேரத்தில், அந்த நடிகையோ முதலில் கதையை சொல்லுங்க என கேட்டதால், பெரிய இயக்குநர் மிகவும் அப்செட்டாகி, எனக்கு இருக்கும் பெயர் என்ன, புகழ் என்ன என்கிட்டையே கதை கேட்குறியா கோபித்துக்கொண்டு, அந்த நடிகையே வேண்டாம் என முடிவு செய்துவிட்டு தற்போது வேறு ஒரு நடிகையிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டுள்ளது

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X