இங்க பாருய்யா... ஒவ்வொரு மொழிக்கும் ஒவ்வொரு ரேட்.. மாஸ்க் கட்டி பறக்கும் மோஸ்ட் வான்டட் ஹீரோயின்!
சென்னை: அந்த ஹீரோயின் ஒவ்வொரு மொழிக்கும் ஒரு ரேட் வைத்துள்ளதாகச் சொல்கிறார்கள், சினிமாவில்.
தமிழில், மாஸ்க் என்ற ஒரே ஒரு படத்தில்தான் நடித்திருக்கிறார் அந்த பூஜை நடிகை. அடுத்து கோலிவுட் அவரை கண்டு கொள்ளவில்லை.
கோலிவுட் இப்படி கைவிட்ட நடிகைகள், மற்ற மொழிகளில் டாப்புக்கு சென்று மீண்டும் திரும்பிவருவது வாடிக்கையான ஒன்றுதான்.

டாப் லிஸ்டில்
இப்போது ஒரு படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. டாப் ஹீரோவின் அடுத்த படத்தில் கூட அவர்தான் ஹீரோயின் என்கிறார்கள். சமீப காலமாக, டோலிவுட்டில் அவர் நடிக்கும் படங்கள் திடீர் ஹிட்டாக, ஹீரோயின் மார்கெட் ஜில்லென்று உயர்ந்திருக்கிறது. ஏகப்பட்ட வாய்ப்புகள். வருமான வரி ரெய்டு நடந்த நடிகையும் இந்த நடிகையும்தான் இப்போது ஹீரோக்களின் டாப் லிஸ்டில் இருப்பதாகச் சொல்கிறார்கள்.

பாகுபலி ஹீரோ
அதனால், அந்த பூஜை நடிகைக்கு இப்போது தமிழிலும் மார்க்கெட் அதிகரித்து வருகிறது. அவர் அந்த பாகுபலி ஹீரோ ஜோடியாக டோலிவுட் படம் ஒன்றில் நடித்து வருகிறார். இதன் ஷூட்டிங் வெளிநாட்டில் நடந்தது. உலகமே கொரோனா பீதியில் உறைந்து கிடக்க, மாஸ்க் அணிந்து கொண்டு, சமீபத்தில் சென்று திரும்பி இருக்கிறார் நடிகை.

மோஸ்ட் வான்டட்
இதற்கிடையே இந்தி படங்களிலும் நடித்து வருகிறார். அவரது இந்தி அறிமுகப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைக்க, இப்போது அங்கும் மோஸ்ட் வான்டட் ஹீரோயின் ஆகி இருக்கி றார் அவர். இந்நிலையில், இந்தியில் டாப் ஹீரோவாக இருக்கும் அந்த கட்டுமஸ்தான கான் நடிகருக்கு ஜோடியாக நடிக்க, இந்த நடிகையை கேட்டு வந்தனர்.

நடிகை சம்பளம்
அந்த ஹீரோ ஜோடியா நடிக்கணுமா? என்று வியந்த நடிகை, அது என் ஆசை, கண்டிப்பா நடிக்கிறேன் என்று சொல்லிவிட்டார். பேச்சுவார்த்தை முடிந்துவிட்டது. பின்னர், படத்துக்காக, நடிகை கேட்ட சம்பளம்தான் அந்த பாலிவுட் தயாரிப்பாளரை பாடாய்ப்படுத்தி இருக்கிறது.
டோலிவுட் படங்களுக்கு ஆரம்பத்தில் குறைவான சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த நடிகை, பிறகு ஒரு கோடிக்கு சென்றார்.

ஒவ்வொரு மொழிக்கும்
அடுத்து ஒன்றரை கோடிக்குப் போனவர், சமீபத்தில் படங்கள் தொடர் ஹிட்டடிக்க, 2 கோடிக்கு சென்றிருக்கிறார். அதே நினைப்போடு பாலிவுட் தயாரிப்பாளரும் நடிகையை அணுக, 'பாலிவுட் பிசினஸே வேற... அதனால 4 கோடி கொடுங்க. இந்திக்கு என் ரேட் இதுதான்' என்று சொல்லி ஷாக் கொடுத்திருக்கிறார் நடிகை. அந்த தயாரிப்பாளரும் கேட்ட தொகைக்கு ஓகே சொல்லி விட்டாராம். ஒவ்வொரு மொழிக்கும் ஒவ்வொரு ரேட் வைத்திருக்கிறார் என்கிறார்கள் அந்த நடிகையை.


Click it and Unblock the Notifications











