டாப் ஹீரோ படத்தில் நம்பர் நடிகை சம்பளம் இவ்ளோ கோடியா? தம்மாத்துண்டு ரோல்தானே... கோலிவுட் ஷாக்
சென்னை: டாப் ஹீரோ படத்தில் நடிக்க நம்பர் நடிகைக்கு வழங்கப்பட்டுள்ள சம்பளத்தைக் கேட்டு கோலிவுட் ஆச்சரியத்தில் உறைந்துள்ளது.
சினிமாக்களில், பொதுவாக ஹீரோயின்களுக்கான சம்பளம் ரொம்ப குறைவு. ஹீரோக்களை ஒப்பிடும்போது, போனால் போகுது என்கிற ரீதியில்தான் ஹீரோயின்களின் சம்பளம் இருக்கும்.
தமிழ் மட்டுமல்லாமல் மற்ற மொழிகளிலும் இதேதான் நிலைமை. ஹீரோக்களை வைத்துதான் பிசினஸ் என்பதால் இப்படி என்பார்கள்.

முன்னணி நடிகைகள்
இந்நிலையில், சில முன்னணி நடிகைகளுக்கு மட்டும் கோடிகளில் சம்பளம் கிடைத்து வருகிறது. அவர்களின் சில படங்கள் தொடர்ந்து ஓடிவிட்டால், இதற்கு வாய்ப்பிருக்கிறது.

டாப் ஹீரோ படம்
மற்றபடி எல்லா நடிகைகளுக்கும் இது வாய்ப்பில்லை. இந்நிலையில், சமீபத்தில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது அந்த டாப் ஹீரோ படம். படம் அப்படி இப்படி என்று காற்றில் பறக்கிறது கருத்துக்கள்.

நம்பர் நடிகை
இந்தப் படத்தில் நடிக்க அந்த ஹீரோவுக்கு 90 கோடி ரூபாய் சம்பளம் கொடுத்திருக் கிறார்களாம். அந்த படத்தில் நம்பர் நடிகைதான் ஹீரோயின். அவருக்கு ரூ.5 கோடி சம்பளமாகக் கொடுக்கப்பட்டுள்ளதாம்.

தம்மாத்துண்டு
இத்தனைக்கும் நடிகைக்கு படத்தில் தம்மாத்துண்டு கேரக்டர்தான். இதுக்கே இத்தனை கோடியா? என்று வாய்பிளக்கிறது கோடம்பாக்கம். அதே நேரம், இது பெரிய பட்ஜெட் படம் என்பதால் ஹீரோயினுக்கு இத்தனை கோடி கொடுப்பதில் தவறில்லை என்றும் சொல் கிறார்கள்.


Click it and Unblock the Notifications