ஓவர் போட்டி, ஓயாத டென்ஷன்.. கன்னாபின்னா கவலையில் பிரபல ஹீரோயின்.. அதுக்காகத்தான் அப்படியாமே!
சென்னை: அந்த பிரபல ஹீரோயின் கன்னாபின்னா கவலையில் இருப்பதாகச் சொல்கிறார்கள் அவருக்கு நெருங்கியவர்கள்.
சினிமாவில், இரண்டு நடிகைகள் சிரித்தபடி பேசிக்கொண்டிருந்தாலும் உள்ளுக்குள் ஓடிக் கொண்டிருப்பது வெறுப்பும் பகையும் என்பது கோலிவுட் அறிந்தது.
போட்டிகள் நிறைந்த கலையுலகில் வெறுப்பும் பொறாமையும் இல்லாமல் இருப்பது எப்படி?

கடவுளின் தேசம்
இது சகஜம்தான் என்றாலும் சில வேதனைகளை மேக்கப் கொண்டு மறைத்து விட முடியாது. அது ஒப்பனைகளை தாண்டியும் வெளியே வந்து விழுந்து விடுகிறது. தமிழ் சினிமாவுக்கான தேவதைகளை இறக்குமதி செய்யும் கடவுளின் தேசத்தில் இருந்து வந்தவர்தான் அந்த நடிகை.

காதலில் விழுந்து
ஆரம்பத்தில் கொஞ்சம் அப்படி இப்படி படத்தில் நடித்தவருக்கு ஒரே ஒரு படம் கொடுத்தது செம ஹிட்டை. பிறகு கவனிக்கப்பட ஆரம்பித்தார். சில பெரிய படங்கள் கிடைத்தன. அதை வைத்து படிப்படியாகி முன்னேறி காதலில் விழுந்து சோகத்தில் முடிந்த கதைகள் பழசாகிவிட்டன. பிறகு பிரபல ஹீரோ ஒருவருடன் நெருக்கமாக இருப்பதாகப் பேசிக் கொண்டார்கள்.

மர்மமாக இருக்கிறது
இதுபற்றி பேச்சுக்கள் பரவலாக, ஹீரோ, நடிகையை விட்டுவிட்டார். இதையடுத்து பாடகர் ஒருவருடனும் அவருக்கு மேரேஜ் முடிந்து விட்டதாகவும் செய்தி. அதை நடிகை மறுத்ததாகச் சொல்லப்பட்டது. ஆனால், அந்த விவகாரத்தில் என்னதான் நடந்தது என்பது பற்றி அவர் வாய் திறக்கவே இல்லை. அது மர்மமாகவே இருக்கிறது இன்றுவரை என்கிறார்கள்.

ஹேப்பியா இருக்கேன்
இதற்கிடையில் வந்து சேர்ந்தது கொரோனா. சினிமா துறை மொத்தமாக முடங்கிவிட, நடிகை வீட்டில் அடைக்கலம் ஆனார். 'இதுவரை குடும்பத்தோட நேரத்தை செலவிட டைம் கிடைக்கலை, இப்ப கிடைச்சிருக்கு, ஹேப்பியா இருக்கேன்' என்று நடிகை சொன்னாலும் அவர் நிஜமாகவே ஹேப்பியாக இல்லையாம்.

மறுத்து விட்டார்
அடுத்து நடிகைக்கு எந்த பட வாய்ப்பும் இல்லை என்கிறார்கள். போட்டி அதிகரித்து விட்டதால், அவருக்கு வந்த சில வாய்ப்புகள் வேறு சிலருக்குச் சென்றுவிட்டதாம். வந்த சில வலைதளத் தொடர்களிலும் ஆபாச பட ரேஞ்சுக்கு நடிக்க வேண்டி இருந்ததாம். இதனால் அதை மறுத்து விட்டதாகச் சொல்கிறார்கள்.

விதவிதமான போட்டோ
இதற்கிடையே ரிசார்ட் ஒன்றுக்கு சென்றார் நடிகை. அவருடன் குடும்பமும் சேர்ந்து கொண்டது. அங்கிருந்தபடி தினமும் விதவிதமான போட்டோஸ்களை பதிவு செய்து வந்தாராம். இந்த திடீர் பயணமே நடிகையின் கவலையை போக்கத்தானாம். ஆனால், நடிகையின் கவலைதான் போனபாடில்லை என்கிறார்கள்.
யாருக்குத்தான் இல்லை கவலை?


Click it and Unblock the Notifications











