இனி எல்லாத்துக்கும் ரெடி..பணத்துக்காக எல்லை மீறும் நடிகை.. நொந்து போன காதலன்!
சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக மாறி உள்ள அந்த பிரியமான நடிகை பணத்திற்காக எந்த எல்லைக்கும் செல்ல ரெடியாக இருப்பதால் அவரது காதலர் நொந்து போய் உள்ளார்.
வாட்டசாட்டமான உடல், அளவான அழகு, தேவையான சம்பளத்தை வாங்கும் நடிகையாக இருப்பதால், இவர் பல தயாரிப்பாளர்களின் செல்ல நாயகியாக இருக்கிறார்.

பிஸியான நடிகை: சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்த இந்த க்யூட் நடிகை தற்போது பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து வருகிறார். பல டாப் நடிகைகளே கைவசம் ஒன்று இரண்டு படங்களை மட்டுமே வைத்து இருக்கும் போது, இந்த நடிகை அரை டசனுக்கு மேல் படத்தை கையில் வைத்துக்கொண்டு பிஸியான நடிகையாக இருக்கிறார்.
முத்தக்காட்சி: அண்மையில் இவர் பிரகாசமான நடிகர் ஒருவருடன் ஜோடி போட்டு நடித்திருந்தார். கலவையான விமர்சனத்தை பெற்ற அந்த படத்தில் பிரியமான நடிகை முத்தக்காட்சியில் வரம்பு நடித்திருந்தார். இதுவரை கவர்ச்சி காட்டாமல் நடித்த அவர் இந்த படத்தில் லிப் லாக் காட்சியில் வரம்பு மீறி நடித்து ரசிகர்களை அதிர்ச்சி அடையச் செய்தார்.
அதிகமான சம்பளம்: ஏடாகூடமான முத்தக்காட்சி இயக்குநர் எதிர்பார்த்தது போல் வராததால், டேக்குக்கு மேல் டேக் போன போதும் அம்மணி கொஞ்சம் கூட முகத்தை சுளிக்காமல் நடித்து கொடுத்துள்ளார். பிரியமான நடிகையின் தாராள குணத்தைப்பார்த்து வியந்து போன தயாரிப்பாளர், பேசியதற்கு அதிகமாகவே சம்பளத்தை கொடுத்துள்ளார்.
கடுப்பான காதலர்: இத்தனை நாள் கவர்ச்சி காட்டாமல் நடித்து வந்த இவர், முத்தக்காட்சியில் நடித்ததால் கடுப்பான, நடிகையின் காதலர் கவர்ச்சி எல்லாம் நம்ம குடும்பத்திற்கு செட் ஆகாது என அறிவுரை கூறியுள்ளார். ஆனால், அதை காதில் வாங்கிக் கொள்ளாத நடிகை, அழகும், வயசும் இருக்கும் போது தான் பட வாய்ப்பு வரும். அதுக்குள்ள செட்டிலாகிவிட வேண்டும் என நைசாக பேசி காதலரின் வாயை அடைத்துள்ளார். இதனால், காதலரோ சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் நொந்து நூடுல்ஸாகி உள்ளார்.
டாப் நடிகைகள்: பிரியமான நடிகையின் இந்த விபரீத முடிவால் இனி வரும் படங்களில் அம்மணியின் கவர்ச்சி தரிசனத்தை பார்க்க முடியும் என்று கோலிவுட் வட்டாரத்தில் செய்தி அடிபட்டு வருகிறது. நடிகை கவர்ச்சி தரிசனம் காட்டினால், டாப் நடிகைகள் எல்லாம் பொட்டியை கட்டிக்கொண்டு கிளம்பி விடவேண்டியதுதான்.


Click it and Unblock the Notifications











