ஐயே, அசிங்கமால்ல இருக்கு.. ஒரு டாப் ஹீரோயின் பண்ற வேலையாய்யா இது? இவ்வளவு சீப்பாவா நடந்துக்குவாங்க?
சென்னை: ஹீரோயின் ஒருவர் புடவை கடையில் செய்த, ஒரு அக்கப்போர் விவகாரம், அசிங்கமாகி இருக்கிறது.
சினிமா பிரபலங்கள் மீது ரசிகர்கள் வைத்திருக்கும் மரியாதை வேறு. அவர்களை பார்க்க மாட்டோமா, பேசமாட்டோமா என்று ஏங்குவார்கள்.
பலர் புகைப்படம் எடுத்துக்கொள்ள அதிக ஆர்வம் காட்டுவார்கள். ஆனால் சில பிரபலங்கள் செய்கிற செயல்களை கேட்டால், அவர்கள் மீதான மரியாதை பொசுக்கென்று உடையும்.

கடை திறப்பு விழா
அப்படியொரு சம்பவம் நடந்திருக்கிறது சமீபத்தில்! அந்த ஹீரோயின் தமிழ், தெலுங்கில் நடித்து வருகிறார். இரண்டு மொழிகளிலும் நடிகைக்கு நலல வருமானம். ஏற்கனவே செட்டிலாகிவிட்ட நடிகையை, அடிக்கடி கடை திறப்பு விழாக்களுக்கு அழைப்பதும் வழக்கம். கேட்ட பணம் கிடைத்துவிட்டால், மறுக்காமல் சென்றுவிடுவார், நடிகை.

ஷாப்பிங் மால்
சமீபத்தில் ஐதராபாத்தில் ஒரு ஷாப்பிங் மால் கிளை ஒன்றின் திறப்பு விழாவுக்கு அழைத்திருந்தார்கள், நடிகையை. அவர் கேட்ட தொகை அதிகமாக இருக்க, பிறகு பேசிப் பேசி ஒரு மாதிரியாகக் குறைத்தார்கள். 'ஒரு மணி நேரம் மட்டும்தான் இருப்பேன். போட்டோவுக்கு போஸ் கொடுத்துட்டு கிளம்பிடுவேன்' என்ற நிபந்தனையுடன் சம்மதித்தார் நடிகை.

நகைகள்
மறுநாள் கடை திறப்பு விழா. இன்று சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்குப் போன் போட்ட நடிகை, 'நான் என்ன காஸ்ட்யூம்ல வரணும்னு சொல்லுங்க. காஸ்ட்யூமையும் நகைகளையும் நான் தங்கி இருக்கிற ஓட்டலுக்கு கொண்டு வாங்க' என்று கேட்டிருக்கிறார். அவர்களும் சில காஸ்ட்யூம்களையும் நகைகளையும் கொண்டு வந்து, நீங்க செலக்ட் பண்ணிக்குங்க' என்று சொல்லி இருக்கிறார்கள்.

ஓட்டல் ரூமுக்கு
அவ்வளவும் நச்சென்று இருக்க, நடிகை ஹேப்பி. பிறகு சொன்னது போல, அவர்கள் கொடுத்த காஸ்ட்யூமில் திறப்பு விழாவுக்கு சென்றார். சொன்னது போலவே போட்டோவுக்கு போஸ் கொடுத்துவிட்டு, அங்கிருந்து தங்கி இருந்த ஓட்டல் ரூமுக்கு சென்றுவிட்டார். போகும் முன், அந்த காஸ்ட்யூம்களை திருப்பிக் கொடுப்பதுதான் நடிகைகளின் வழக்கமாம்.

பிளைட் பிடித்துவிட்டார்
ஆனால், அப்படி ஏதும் செய்யாமல் நடிகை சத்தம் போடாமல் பிளைட் பிடித்துவிட்டார். அந்த காஸ்ட்யூம்களின் விலை, சில லட்சங்களாம். நகைகள், தங்கம் இல்லை என்றாலும் காஸ்ட்லியானதாம். சம்பளமும் வாங்கிக்கொண்டு காஸ்ட்லி காஸ்ட்யூமையும் எடுத்துக்கொண்டு போய்விட்டாரே என்று கடுப்பாகி இருக்கிறார்கள், அழைத்தவர்கள்.

சம்பளத்தை குறைத்தால்
நடிகைக்கு போனை போட்டு இதுபற்றி காய்ச்சி எடுக்க நினைத்தார்களாம். இந்த சின்ன விஷயத்தை என்னத்த கேட்க என்று விட்டுவிட்டார்களாம். சம்பளத்தை குறைத்துப் பேசியதால் காஸ்ட்யூம்களை கரெக்ட் பண்ணிவிட்டாராம் நடிகை. எத்தனை லட்சங்கள் சம்பளமாக கொடுத்தாலும் புடவை, நகைகள் ஆசை மட்டும் போக மட்டேங்குதே என்று புலம்புகிறார்கள் டோலிவுட்டில்!


Click it and Unblock the Notifications











