இசையமைப்பாளர் வலையில் சிக்கிய நடிகை..45வயது நடிகையை கூட விட்டுவைக்கல..அவ்ளோ வெறி மாப்பிளைக்கு!
சென்னை : பிரபல இசையமைப்பாளரின் வலையில் முன்னணி நடிகை ஒருவர் சிக்கி உள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.
பிரபலமாக இருந்தால் கிசுகிசுக்களில் சிக்குவது சகஜமான ஒன்றுதான், என்பதால், பலரும் இணையத்தில் பரவும் வதந்தி பற்றி கவலை கொள்ளாமல் இருக்கின்றனர்.
இசையமைப்பாளருக்கு திருமணம் செய்து வைத்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று, குடும்பத்தினர் பெண் பார்க்கும் வேலையை தொடங்கி உள்ளனர்.

அடிக்கடி கிசுகிசு
சிறு வயதாக இருந்தாலும் டாப் நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக இருக்கிறார் இந்த சர்ச்சை இசையமைப்பாளர். இவருக்கும், கிசுகிசுக்கும் பத்து பொருத்தமும் பக்காவாக பொருந்தி இருக்கிறதோ என்னமோ தெரியவில்லை. இவர் சினிமாவுக்கு வந்த நாளிலிருந்தே அடிக்கடி கிசுகிசுவில் சிக்கி வருகிறார்.

இது..அது மாதிரி இருக்கே
ஆனால், மனுஷன் அதைப்பற்றி எல்லாம், கவலைப்படாமல் எந்த இசையை ஆட்டையபோட்டு எந்த மியூசிக்கில் நைசாக சொருகலாம் என ரூம் போட்டு யோசிக்காத குறையாக யோசித்து வருகிறார். ஆனால், ரசிகர்களே இவர் எந்த மியூசிக்கை சுட்டாலும், அதைவட்டம் போட்டு காட்டி இது..அது மாதிரி இருக்கே என்று கூறி அவரை கலாய்த்து வருகின்றனர்.

பாடகியுடன் டேங்கிங்
சமீபத்தில் ஒரு முன்னணி நடிகையுடன் நெருக்கமாக இருந்த புகைப்படம் இணையத்தில் வெளியானது, அந்த நடிகையை திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் தகவல் பரவியது. ஆனால், நடிகையின் குடும்பம் இதை ஏற்றுக்கொள்ளாததால் இருவரும் பிரேக் அப் செய்து விட்டதாக கூறப்பட்டது. இதையடுத்து, தன்னுடன் இணைந்து பாடிய ஒரு பாடகியுடன் டேங்கிங் செய்து வருவதாகவும் அவர்கள் நெருக்கமாக இருக்கும் போட்டோவும் வெளியானது.

45 வயது நடிகை
இப்படி ஏகப்பட்ட சர்ச்சையில் சிக்கிய அந்த பிரபல இசையமைப்பாளர் தற்போது 45 வயது நடிகையை தனது வலையில் சிக்க வைத்துள்ளாராம். அந்த இசையமைப்பாளரும் , 45 வயது நடிகையும் உறவினர்கள் என்பதால், அடிக்கடி சந்தித்து வருகின்றனர். இந்த 45 வயது நடிகை ஏற்கனவே ஒரு பிரபல நடிகருடன் கிசுகிசுக்கப்பட்ட நிலையில், கடைசியில் அந்த பிரபல நடிகர் இவருக்கு டாடா காட்டிவிட்டதால், தற்போது இசையமைப்பாளருடன் ஐக்கியமாகி உள்ளார்.


Click it and Unblock the Notifications











