இனி வாய்ப்பு வருமோ வராதோ? கிடைச்ச வரை லாபம்... கோடிகள் ஆசையில் நம்பர்.. அதனால்தான் அந்த முடிவாம்

By

சென்னை: பண ஆசை யாரை விட்டது? அதுவும் கோடிகளாகக் குவிப்பவர்களுக்கு கோடிகளின் மீதான ஆசை தீராது போலிருக்கிறது.

ஆரம்ப காலத்தில் அப்படி இப்படி நடித்து வந்தார் நம்பர் நடிகை. பிறகு காதலில் விழுந்து மீண்ட பிறகு என்ன நினைத்தாரோ, நல்ல கதைகளில் நடக்கத் தொடங்கினார்.

மற்ற மொழிகளிலும் அப்படியே செய்தார். ஒர்க் அவுட் ஆனது. வயது ஏற ஏற சீனியர் நடிகைகளை கழற்றி விடுவதுதான் சினிமா வழக்கம்.

வாய்ப்புகள் குவிந்தன

வாய்ப்புகள் குவிந்தன

ஆனால், நம்பர் நடிகையின் மேட்டரில் இந்த விஷயம் தலைகீழாக நடந்தது. அதாவது வயது ஆக ஆக நடிகையின் அழகும் ஏறியது. இதனால் வாய்ப்புகள் குவிந்தன. கூடவே பணமும். இதையடுத்து ஒரு கட்டத்தில் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடிக்கத் தொடங்கினார்.

டர்னியிங் பாயின்ட்

டர்னியிங் பாயின்ட்

இவர் நேரமோ, என்னமோ, அந்த படங்கள் அனைத்தும் ஹிட். இங்குதான் ஹீரோயினுக்கு டர்னியிங் பாயின்ட். தனது சம்பளத்தை திடீரென கோடிகளுக்கு உயர்த்தினார். சரி என்று தயாரிப்பாளர்களும் அள்ளிக்கொடுத்தனர். தொடர்ந்து நான்கைந்து படங்கள் ஹிட்டானதை அடுத்து, டப்பென்று இன்னும் சில கோடிகள் உயர்த்தினார்.

வருமோ, வராதோ

வருமோ, வராதோ

தமிழ் சினிமாவில் எந்த ஹீரோயினும் வாங்காத சம்பளத்தை வாங்கத் தொடங்கினார். கோலிவுட் வாய்பிளந்தது. மற்ற ஹீரோயின்களே அவரை பார்த்து வியந்தனர். தயாரிப்பாளர்களும் கேட்டதைக் கொடுக்கத் தொடங்கினர். இப்போது ஹீரோயின் ஒன்றைப் புரிந்துகொண்டார். வயதாகிவிட்டது, இனி இதுபோன்ற வாய்ப்புகள் வருமோ, வராதோ கிடைத்த வாய்ப்பை நன்றாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று.

தம்மாத்துண்டு ரோல்

தம்மாத்துண்டு ரோல்

இதையடுத்து உச்சநடிகர் படத்தில் தம்மாத்துண்டு ரோலில் நடித்தார். ரோல் தம்மாத்துண்டு என்றாலும் சம்பளம் வெயிட்டு. இப்போது பழைய ஹிட் காம்பினேஷனில் மீண்டும் இருந்து அழைப்பு வர, ஓகே சொன்னார் ஹீரோயின். ஏற்கனவே அந்தப் படத்தில் ஏகப்பட்ட முன்னாள்கள் இருக்க, இவருக்குத்தான் முக்கியத்துவம் என்று சொல்லியிருக்கிறார்கள்.

குவாலிட்டியை விட

குவாலிட்டியை விட

ஆனாலும் அந்த கேரக்டரும் தம்மாத்துண்டுதானாம். அதைப்பற்றி கவலைப்படாமல், தனக்கு இவ்வளவு சம்பளம் வேண்டும், அது கிடைக்கும் என்றால் கேரக்டர் எப்படியிருந்தாலும் பரவாயில்லை என்று கூறியிருக்கிறாராம். குவாலிட்டியை விட பணத்தின் மேல் நம்பர் ஆசையாக இருப்பதால்தான் இந்த முடிவாம். கோலிவுட்டில் பேச்சாகக் கிடக்கிறது இப்படி.

More from Filmibeat

Read more about: gossip
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X