படவாய்ப்பே இல்ல.. விவகாரமான படத்தில் நடித்த சீரியல் நடிகர்.. விளாசும் நெட்டிசன்ஸ்!
சென்னை: பிரபல தொலைக்காட்சியில் டாப் சீரியலில் லீட் கேரக்டரில் நடித்து வரும் நடிகர் ஒருவர், சினிமாவிற்கு வந்த புதிதில் வாய்ப்பு கிடைக்காததால், விவகாரமான படத்தில் நடித்து இருப்பது தற்போது தெரியவந்துள்ளது. அந்த தகவலை அறிந்த நெட்டிசன்கள் அவரை பங்கமாக திட்டி தீர்த்து வருகின்றனர்.
பிரபலமான தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அந்த சீரியல் இல்லத்தரசிகள் ரசித்துப் பார்க்கும் சீரியல் ஆகும். இந்த சீரியலின் இயக்குநர், இதற்கு முன் பல வெற்றி பெற்ற சீரியலை இயக்கி உள்ளதால், இந்த சீரியலும் அதே போல மனம் கவர்ந்த சீரியலாக உள்ளது. இந்த சீரியலில், கலர் கலராக லுங்கி கட்டிக்கொண்டு, கலர் சட்டை போட்டுக்கொண்டு, எப்போதும் திமிர் பிடித்த இளைஞன் போல, மிகவும் எதார்த்தமாக நடித்து வருபவர் தான் அந்த 'வி' எழுத்து நடிகர்.

பெண்களுக்கு பிடித்த நடிகர்: அவரின் அம்சமான முகத்திற்கும், அழகான பேச்சுக்கும் பெண் ரசிகைகளுக்கு பிடித்துப்போக, இவருக்கு என்று தனி டீன் ஏஜ் ரசிகைகள் இருக்கிறார்கள். மாடல் நடிகராக இவர், கொழு கொழு நடிகை அறிமுகமான படத்தில் ஒரு முக்கியமான சீனில், அந்த நடிகைக்கு மாப்பிள்ளையாக நடித்திருந்தார். அது ஒரு சிறிய காட்சி என்பதால், அதன் பிறகு சினிமாவில் சின்ன சின்ன வாய்ப்புகள் தான் வந்தன. ஆனால், பெரியதாக எடுபடவில்லை. இதையடுத்து சின்னத்திரைக்கு தாவிய இவருக்கு, சின்னத்திரை கை கொடுத்தது. இதைத் தொடர்ந்து சின்னத்திரையில் அடுத்தடுத்து சீரியல்களில் நடித்து இன்று, முன்னணி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியலில் லீட் ரோலில் நடிக்கும் அளவிற்கு உயர்ந்து இருக்கிறார்.
விவகாரமான படத்தில்: இவர் சினிமாவிற்கு வந்த ஆரம்பத்தில் சினிமாவில் நடிக்க வாய்ப்பு வராததால், பட வாய்ப்பை பெறவும், பணத் தேவைக்காகவும் விவகாரமான படம் ஒன்றில் நடித்துள்ளது தற்போது தெரியவந்துள்ளது. அந்த படத்தின் வீடியோக்கள் தற்போது, வி எழுத்து நடிகரின் இமேஜை கெடுக்கும் வகையில் இணையத்தில் வெளியாகி உள்ளது. அந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் அவரை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். எப்போது, நடித்த படம் இப்போது டிராண்டாகி மானத்தை வாங்குதே என அந்த சீரியல் நடிகர் தற்போது வருத்தத்தில் இருக்கிறார்.


Click it and Unblock the Notifications











