இது நெசம்தானா..? வெப்சீரிஸில் அந்த மாதிரி நடிக்க, இறங்கி வந்துட்டாராமே, அந்த பிரபல ஹீரோயின்!
சென்னை: அந்த டாப் ஹீரோயின் வெப் சீரிஸ் ஒன்றில் அந்த மாதிரி கேரக்டரில் நடித்திருப்பதாகச் சொல்கிறார்கள், இன்டஸ்ட்ரியில்.
இந்த லாக்டவுன் நேரத்தில் வெப் சீரிஸ் பக்கம் கவனம் திருப்பி இருக்கிறார்கள், சினிமாகாரர்கள்.
லாக்டவுனுக்கு முன்பாகவே சிலர் வெப்சீரிஸில் நடிக்கவும் அதை இயக்கவும் ரெடியாகி விட்டார்கள்.

பாலியல் விஷயங்கள்
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்கள் கூட வெப்சீரிஸ் இயக்கி வருகின்றனர். மேலும் சில இயக்குனர்கள் இயக்க இருக்கின்றனர். சில இயக்குனர்கள் அதற்கான கதை விவாதத்தில் தீவிரமாக இறங்கியுள்ளனர். தயாரிப்பு நிறுவனம் போடும் கண்டிஷன்களில் ஒன்று, இதன் கதை மற்ற மொழிகளுக்கும் ஏற்ற மாதிரி இருக்க வேண்டும் என்பது. மற்றொன்று கதைக்குள் பாலியல் விஷயங்களுக்கும் கிரைமுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பது.

சரிபட்டு வருமா?
அதனால் அந்த மாதிரி விஷயங்களுக்காக மண்டையை பிய்த்துக்கொண்டிருக்கிறார்கள் இயக்குனர்கள். பாலியல் விஷயங்கள், இந்தி, ஆங்கில வெப்சிரிஸ்களுக்கு ஓகே, தமிழ் வெப்சீரிஸ்களுக்கு சரிபட்டு வருமா? என்பது இங்குள்ள இயக்குனர்கள் கேள்வி. சில இந்தி வெப்சிரிஸ்களில் அரை நிர்வாணமாகவும் சில முன்னணி ஹீரோயின்கள் நடித்துள்ளனர். இங்கு, அந்தளவுக்கு இல்லை என்றாலும் அதில் பாதியளவுக்காவது வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்களாம், தயாரிப்பு தரப்பில்.

கிளாமராக நடித்ததில்லை
அதனால், தமிழில் உருவாகும் வெப்சீரிஸ்களிலும் அந்த மாதிரி காட்சிகள் கண்டிப்பாக இடம்பெற இருக்கிறதாம். இந்நிலையில் முன்னணி நடிகை ஒருவர், தாராளமாக வெப் சீரிஸ் ஒன்றில் படுக்கையறை காட்சியில் நடித்திருக்கும் தகவல் கோடம்பாக்கத்தில் பரவி வருகிறது. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் நடித்து வரும் அந்த வட இந்திய டாப் நடிகை, தான் நடிக்கும் படங்களில் கூட அதிக கிளாமராக நடித்ததில்லை.

அடல்ட் காமெடி
பாடல் காட்சிகளில் மட்டும் கொஞ்சமாக அப்படி நடித்திருப்பார். அவர் இப்போது நடித்திருக்கும் அந்த அடல்ட் காமெடி வெப்சீரிஸில் எல்லோருக்கும் அதிர்ச்சி கொடுக்கும் விதத்தில் ஓவர் கிளாமராக நடித்திருக்கிறாராம். இந்த வெப்சீரிஸை இரண்டு பெயர்களை இணைத்து, தனது பெயராக வைத்திருக்கிற பிரபல இயக்குனர், இயக்கி இருக்கிறார். ரிலீஸுக்கு காத்திருக்கிறது டீம்!

தியேட்டர்கள் இல்லை
கொரோனா காரணமாக சினிமா துறை முடங்கிக் கிடக்கிறது. படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தியேட்டர்களும் இல்லை என்பதால் சினிமா ரசிகர்கள் ஓடிடி தளங்களை நாடுகின்றனர். அந்த தளங்களில் ரிலீஸ் செய்யப்பட்ட தமிழ்ப் படங்கள் சரியான வரவேற்பை பெறவில்லை. அடுத்து வெப்சீரிஸை இறக்க இருக்கின்றனர். ரசிகர்களை மொத்தமாக ஈர்க்க, பாலியல் சார்ந்த விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பதாகச் சொல்கிறார்கள்.


Click it and Unblock the Notifications