ஓட்டல் அறையில் கேட்ட சத்தம்.. காலையில் வெளியே வந்த ஜோடி..அதிர்ந்து பார்த்த மூத்த நடிகை!

By Staff

சென்னை: சினிமா துறை என்றாலே கிசுகிசுகளுக்கு பஞ்சமே இல்லாத துறை தான். அதுவும் ஒரு நடிகை ஒரு நடிகரோடு தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்து விட்டால், அந்த நடிகருக்கும், இந்த நடிகைக்கும் தொடர்பு என்று பலவிதமான செய்திகள் இணையத்தில் பரவி வருவது வழக்கம். ஆனால், அழகு நடிகர் எந்த படத்தில் எந்த நடிகையுடன் நடித்தாலும், அந்த நடிகையுடன் நெருக்கமாக பழகுவதை வாடிக்கையாக வைத்திருந்தார்.

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அந்த அழகு நடிகர், இயக்கம், தயாரிப்பு, நடிப்பு திரைக்கதை ஆசிரியர், பாடகர் என பலவித திறமைகளை கொண்டவர். கருப்பு வெள்ளை சினிமா காலத்திலிருந்து இப்போது வரை அவருக்கு மார்க்கெட்டில் மவுசு இருக்கிறது.

gossip kisu kisu tamil cinema

டாட்டா காட்டிய நடிகர்: அந்த அழகு நடிகருடன் எந்த நடிகை இணைந்து நடித்தாலும், அந்த நடிகைகளுக்கே இவரை திருமணம் செய்து கொள்ளலாம் என்ற எண்ணம் வந்துவிடும். அந்த அளவுக்கு புத்திசாலியாகவும், அழகாகவும் இருந்ததால் பல நடிகைகள் இவர் பின்னால் சுற்றிய கதையும் உண்டு. இந்த விஷயம் எல்லாம் தெரிந்து கொண்ட அழகு நடிகரும், நடிகைகளுடன் நெருங்கி பழகி விட்டு கடைசியில் அவர்களுக்கு டாட்டா காட்டிய கதைகளும் அந்த கால சினிமாவில் நடந்திருக்கிறது.

காதலித்த நடிகை: இப்படித்தான் அந்த அழகு நடிகரை, ஒரு நடிகை விழுந்த விழுந்து காதலித்திருக்கிறார். இந்த நடிகருக்கும் அந்த நடிகையின் மீது ஒருவித விருப்பம் இருந்துள்ளது. ஆனால், இவர்களின் காதல் விஷயம் பெற்றோருக்கு தெரியவர, இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால், கடுப்பான அழகு நடிகர், அந்த நடிகைக்கு டாட்டா காட்டிவிட்டு வேறு ஒரு பாலிவுட் நடிகையை காதலித்தார். அழகு நடிகரும், பாலிவுட் நடிகையும் பல இடங்களில் ஊர்களை சுற்றி வந்திருக்கிறார்.

ஓட்டல் அறையில் சத்தம்: அப்படித்தான் படப்பிடிப்பு ஒன்றுக்காக அந்த அழகு நடிகர் வெளிநாட்டுக்கு படப்பிடிப்புக்கு சென்றுள்ளார். அப்போது, அந்த படத்தில் நடிக்காத பாலிவுட் நடிகையை வெளிநாட்டுக்கு வரவைத்துள்ளார். அது மட்டுமல்லாமல் அழகு நடிகர் தங்கிய ஓட்டல் அறையிலேயே இருவரும் தங்கி இருக்கிறார்கள். இந்த அறைக்கு பக்கத்து அறையில் தான், சில மூத்த நடிகைகளுக்கும் அறை ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால், இரவு நேரத்தில் அழகு நடிகர் அறையில் இருந்து சத்தம் வந்துள்ளது. அழகு நடிகர் அறையில் என்ன சத்தம், யார் வந்து இருப்பது என்று கேள்வி எழுந்தது. காலையில் யாருக்கும் தெரியாமல் அந்த பாலிவுட் நடிகையை அனுப்பிவிடலாம் என அழகு நடிகர் ப்ளான் போட்டு வைத்திருந்தார்.

சிக்கிய ஜோடி: ஆனால், பக்கத்து அறையில் இருந்த மூத்த நடிகைகள், அழகு நடிகரின் அறையில் யார் இருக்கிறார் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதில் ஆர்வமாக இருந்ததால், விடிந்ததும் விடியாததுமாக காலையிலேயே அறையின் வாசலில் கூட்டமாக கூடி நின்று பேசிக் கொண்டு இருந்துள்ளனர்.. அப்போதுதான் அந்த அழகு நடிகரும், பாலிவுட் நடிகையும் ஒன்றாக அறையில் இருந்து வெளியே வந்தது தெரிந்தது என்றும், அழகு நடிகரும், பாலிவுட் நடிகையும் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதே எங்களுக்கு அப்போது தான் தெரிந்தது என்று மூத்த நடிகை ஒருவர் அண்மையில் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X