2k கிட்ஸ் சூப்பர் ஸ்டாரின் அந்தரங்க லீலைகள்.. ஒரு ஹீரோயினையும் விடமாட்றாராம்.. எப்போ சிக்கப்போறாரோ
சென்னை: தமிழ் சினிமாவின் இப்போதைய சென்சேஷனல் ஹீரோவாக மாறியிருக்கிறார் அவர். வரிசையாக ஹிட் படங்கள் கொடுத்துவருவதால் அவரை அனைவருமே கொண்டாடிவருகிறார்கள். ஆனால் இந்த வெற்றி கொடுத்த மமதையால் அந்த நடிகர் சில விஷயங்களில் எல்லை மீறி நடந்துகொள்கிறாராம். அதுவும் ஹீரோயின் விஷயத்தில் ஓவராகவே நடந்துகொள்ளும் அவர் பற்றித்தான் கிசுகிசு கிளம்பியிருக்கிறது.
சினிமா எப்போது யாரை வளர்த்துவிடும் என்றே தெரியாது. பெரிய ஆளாக வருவார் என்று கணிக்கப்பட்டவர் எல்லாம் காணாமல்போய்விடுவார்கள். இவரெல்லாம் வெற்றி பெறுவாரா என்று யோசித்தவர்களை எல்லாம் உச்சாணி கொம்பில் ஏற்றி அமர வைக்கும். அப்படித்தான் இந்த நடிகரும். இவர் அறிமுகமானபோது சில வருடங்களில் காணாமல் போய்விடுவார் என்றுதான் பலரும் பேசினார்கள்.
முதல் ஹிட்: ஆனால் அவர் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் பணிகளில் கவனம் செலுத்தினார். இப்போதைய காலகட்ட காதலை மனதில் வைத்து எடுக்கப்பட்ட படத்தில் நடித்தார். அந்தப் படம் அதிரிபுதிரி ஹிட்டடித்தது. ஆனால் அதெல்லாம் லக்கால் வந்த ஹிட் என்று முத்திரை குத்தினார்கள். ஆனால் அடுத்த படத்தையும் மெகா ஹிட்டாக கொடுத்து தனக்கு வந்த, வரும் வெற்றியெல்லாம் லக்கால் வந்தது இல்லை திறமையால் வந்தது என்று நிரூபித்தார். அடுத்து நடித்த மூன்றாவது படமும் ஹிட்டடிக்க; அவர் சென்சேஷனல் ஆகிவிட்டார்.

திறமைக்காரர்: வரிசையாக மூன்று பெரிய ஹிட்டுகளை கொடுத்ததால் இப்போதைய தலைமுறை ஹீரோக்களில் அவர்தான் டாப்பில் இருக்கிறாராம். மேலும் 2கே கிட்ஸ்களுக்கான சூப்பர் ஸ்டார் என்றும் அவருக்கு நெருக்கமானவர்களால் அழைக்கப்படுகிறாராம். விரைவில் அந்தப் பட்டத்தையே தனது பெயருக்கு பின்னால் போட்டுக்கொள்வது என்ற ஐடியாவிலும் இருக்கிறாராம் நடிகர்.
ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம்: இந்நிலையில் அவர் பற்றி புதிய கிசுகிசு ஒன்று கிளம்பியிருக்கிறது. அதாவது மூன்று வரிசையான ஹிட்டுகள் அவரது மைண்ட் செட்டையே மாற்றிவிட்டதாம். முன்பெல்லாம் கதைக்கு முக்கியத்துவ்ம் கொடுத்து ஒரு படத்தில் நடிப்பதா வேண்டாமா என்று முடிவு செய்தவர். இப்போது வேறு மாதிரி மாறியிருக்கிறாராம். அது என்னவென்றால், 'கதை சொல்லவரும் இயக்குநர்களிடம் யார் ஹீரோயின் என்றுதான் முதலில் கேட்கிறாராம்.
அந்தரங்க லீலைகள்: அப்படித்தான் ஒரு இளம் இயக்குநர் சமீபத்தில் கதை சொல்ல சென்றாராம். வழக்கம்போல் இவர் ஹீரோயின் யார் என்று கேட்க; இயக்குநர் ஒரு பெயரை சொன்னாராம். அவரெல்லாம் வேண்டாம் இவரை போடுங்கள் என்று நடிகர் ஒரு பெயரை சொல்லிவிட்டாராம். அதுமட்டுமின்றி அந்தப் பெண்ணிடம் நீங்களே பேசி என்னை சந்திக்க வர சொல்லுங்கள் என ஆர்டரும் போட்டுவிட்டாராம். அந்த இயக்குநரும் வளர்ந்துவரும் அந்த ஹீரோயினிடம் விஷயத்தை சொல்ல; நடிகரை பார்க்க சென்றாராம்.
தனி அறையில்: தன்னை சந்திக்க வந்த ஹீரோயினிடம் முதலில் சகஜமாக பேசி எப்படியோ வலையில் விழ வைத்துவிட்டாராம். கதை பற்றி டிஸ்கஷன் செய்யலாம் என்று சொல்லில் தனி அறைக்கு அழைத்து சென்று கிட்டத்தட்ட இரண்டு நாட்கள்வரை விடவே இல்லையாம். அதேபோல்தான் தன்னிடம் கதை சொல்ல வரும் இயக்குநர்களிடம் ஹீரோயினை பற்றி கேட்டு; அவர்கள் மூலமாகவே தன்னை கதாநாயகிகள் சந்திக்கவரும்படி பிளான் செய்து கச்சேரி நடத்திக்கொண்டிருக்கிறாராம் அந்த நடிகர். தனது பெயர் வெளியே டேமேஜ் ஆகிவிடக்கூடாது என்பதால்தான் இயக்குநர் மூலம் அழைப்பு விடுக்கிறாராம். செம விவரம்தான்.


Click it and Unblock the Notifications











