ஆத்தாடி ஒரு கேள்வி கேட்டதுக்கா இப்படி? மீட்டிங்கில் இருந்து வெளியேறிய ஹீரோயின்

By

சென்னை: ஒரே ஒரு கேள்வி கேட்டதுக்கு அப்செட் ஆன ஹீரோயின் அந்தக் கூட்டத்தில் இருந்து வெளியேறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ரெட்டி பட ஹீரோ நடித்திருக்கும் உலக பேமஸ் காதல் படம் வெள்ளிக்கிழமை ரிலீஸ். இதில் நான்கு பேர் ஹீரோயின்களாக நடித்திருக்கிறார்கள்.

அதில் ஒருவர், அந்த இரண்டு பெயர்களை கொண்ட கதகளியாடும் நாயகி. தெலுங்கு தமிழ் என மாறி மாறி நடித்துவருகிறார் இவர்.

சீனியர் ஹீரோ

சீனியர் ஹீரோ

கலகலப்பான படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்திருந்த அந்த நடிகையை தெலுங்கு சினிமாவின் சீனியர் ஹீரோவுக்கு ஜோடியாக நடிக்க கேட்டார்கள். வேறு சில ஹீரோயின்களின் கால்ஷீட் கிடைக்காததால் இவரிடம் கேட்டார்களாம். வேறு சில நடிகைகளிடமும் கேட்டிருப்பார்கள் போலிருக்கிறது.

சில கோடிகளை

சில கோடிகளை

இந்த ஹீரோயின், நடிப்பதற்கு ஓ.கே சொன்னார். இதையடுத்து படத் தயாரிப்புத்தரப்பு ஹீரோயினிடம் சம்பளம் விவகாரம் பற்றி பேச்சுவார்த்தை நடத்தியது. வழக்கமாக அந்த நடிகை வாங்குவது குறைந்த லட்சங்களே... ஆனால், இந்தப் படத்துக்காக அவர் கேட்டது, சில பல கோடிகளை. தன் காதில் தவறாக விழுந்துவிட்டதோ என அவர், திரும்பவும் கேட்டதாம். மீண்டும் அதையே சொன்னாராம் நடிகை.

இப்படி கேட்கிறீங்களே?

இப்படி கேட்கிறீங்களே?

ஷாக் ஆன தயாரிப்பு, இதுக்கு முந்தைய படங்கள்லலாம் இவ்வளவுதான வாங்கியிருக்கீங்க. இப்ப இப்படி கேட்கிறீங்களே? என்று கேட்டிருக்கிறார். நடிகை தரப்பு, அது இளம் ஹீரோ படம். நீங்க நடிக்கக் கூப்பிடுவது சீனியர் ஹீரோ படம். அதனாலதான் என்று விளக்கம் கொடுத்த தாம். சீனியர் ஹீரோன்னா, அதுக்கு இவ்வளவு சம்பளமா கேட்பீங்க? என்று கடுப்பான தயாரிப்பு, வேறு ஹீரோயினை தேடி வருகிறார் இப்போது.

ஏன் இந்த கோபமோ?

ஏன் இந்த கோபமோ?

இந்த விஷயம் அமைதியாக நடந்து முடிந்திருக்க, கடந்த சில நாட்களுக்கு முன், உலக பேமஸ் காதல் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் நடிகை. அங்கு ஒரு செய்தியாளர், அந்த சீனியர் ஹீரோ படத்தில் நடிக்கிறீங்களா? இல்லையா? என்று கேட்டு வைக்க, டென்ஷன் ஆன நடிகை, 'அதை ஏன் எங்கிட்ட கேட்கிறீங்க? இதுக்கெல்லாம் பதில் சொல்ல மாட்டேன்' என்று திடீரென எழுந்து போய்விட்டாராம்... 'அப்படி என்னத்த தப்பா கேட்டுட்டார் அவர். நடிகை இப்படி கோபமாக போறாங்களே? என்று ஆச்சர்யப்பட்டார்களாம் செய்தியாளர்கள். ஏன் இந்த கோபமோ?

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X