சொன்னது எல்லாம் பொய்.. வசமாய் சிக்கிய நம்பர் நடிகையின் கணவர்.. பாவம் அந்த நடிகைக்கு நேரமே சரியில்லை!
சென்னை: இந்த ஊருக்கு என்னத்தான் ஆச்சு.. புகையும் தூசு மண்டலமும் என்று சிகரெட் விளம்பரத்தில் வருவது போல தற்போது நம்பர் நடிகைக்கு என்ன தான் ஆச்சு என விவாதம் எழுந்துள்ளது. அவர் எது செய்தாலும், அது சர்ச்சையாகி, நான்கு பேர் யூடியூப்களில் பஞ்சாயத்து பேசும் அளவிற்கு ஆகிவிட்டது. இதற்கு எல்லாம் காரணம் நம்பர் நடிகைக்கு இருக்கும் தலைக்கணம் என பலர் சொன்னாலும், சிலர் மார்க்கெட் சரிந்துவிட்டதால், அதை சரிகட்டுவதற்காக செய்யும் யுக்தி என சிலர் கருத்துக்களை கூறி வருகின்றனர்.
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகையான இவர், பல காதல் தோல்விக்கு பிறகு அதில் இருந்து மீண்டு மீண்டும் ஒரு இயக்குநரை காதலித்தார். சில ஆண்டுகள் இருவரும் ஒன்றாக வாழ்ந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு நம்பர் நடிகைக்கு பட வாய்ப்பு குறைந்து போக, அந்த நடிகை பிஸ்னசில் கவனம் செலுத்தி அதை சிறப்பாக செய்து வருகிறார்.

திடீரென வந்த ஆசை: நம்பர் நடிகைக்கு திடீரென ஓட்டல் ஒன்றை தொடங்க வேண்டும் என ஆசைவர, நம்பர் நடிகையின் கணவரோ அவ்வளவு தானே என, பிரபலமான ஓட்டலை விலை பேசி உள்ளார். இதைக் கேட்டு அதிர்ர்ச்சி அடைந்த பெரும் அரசியல் புள்ளி, இது அரசுக்கு சொந்தமான ஓட்டல் என்றும், இதை விலைக்கு தரமுடியாது என்று கூறி இருக்கிறார். இந்த செய்தி இணையத்தில் வெளியானது, அந்த நம்பர் நடிகையின் கணவர், நான் அந்த ஓட்டலை விலைக்கு கேட்கவில்லை, படப்பிடிப்பு ஒன்றுக்காக அனுமதி பெறத்தான் அந்த அரசியல் புள்ளியை சந்தித்தாக விளக்கம் கொடுத்து இருந்தார்
எல்லாமே பொய்: நம்பர் நடிகையின் கணவர் விளக்கம் கொடுத்தாலும், இணையவாசிகள் மீம்ஸ் போட்டு பங்கம் செய்துவிட்ட நிலையில், தற்போது, நம்பர் நடிகையின் கணவர் சொன்னது எல்லாம் பொய் என்பது வெட்ட வெளிச்சமாகி உள்ளது. அதாவது, சட்டமன்றத்திலேயே தனி நபர் ஒருவர் எப்படி அரசாங்க சொத்தை விலைக்கு கேட்க முடியும் என்றும், அரசாங்க சொத்தை அப்படியெல்லாம் யாரும் விலைக்கு வாங்க முடியாது என தீர்மானமே நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இதனால், நம்பர் நடிகையின் கணவர் சொன்னது மொத்தமும் பொய் என தெரியவந்துள்ளது.


Click it and Unblock the Notifications











