எனக்கு மட்டும் ஏன் இப்படி தொடர்ந்து நடக்குது..? நொந்து போன ஹீரோயின்.. பரிதாபப்படும் தோழிகள்!
சென்னை: சினிமாவில், ராசி சென்டிமென்ட்டுக்கு ஓவர் முக்கியத்துவம் கொடுப்பார்கள்.
எதற்கெடுத்தாலும் சென்டிமென்ட்தான். சின்ன விஷயம் எக்குத்தப்பானாலும், அது நடக்கக் கூடாதே என்பார்கள்.
இது ஒரு பக்கம் என்றாலும் இந்த சென்டிமென்டை மீறுபவர்களும் சினிமாவில் இருக்கிறார்கள்.

காண்பிக்க முடியலை
இது இருக்கட்டும். மலையாளத்தில் இருந்து தமிழுக்கு வந்தவர் அந்த இளம் நடிகை. அவர் நடித்த முதல் படம், பேய் தொடர்பான கதையை கொண்டது. இதனால் படத்தில் அந்த நடிகையின் முகத்தை அதிகமாகக் காண்பிக்க முடியவில்லை. இருந்தாலும் படம் பேசப்பட்டதால் நடிகைக்கு மகிழ்ச்சி.

ஏமாற்றமே மிச்சம்
இதனால் நல்ல வாய்ப்பு கிடைக்கும் என்று நம்பிக்கையோடு காத்திருந்தார். ஆனால் ஏமாற்றம்தான் மிச்சம். பிறகு சொந்த ஊரான கடவுளின் தேசத்துக்கே சென்றார். அங்கு சில படங்களில் நடித்தாலும் பெரிய அளவில் படங்கள் பேசப்படவில்லை. சில படங்களில் கெஸ்ட் ரோல்தான் கிடைத்தது.

டேக் ஆப் ஆகும்
இந்நிலையில் தமிழில், உருவாக இருந்த ஒரு புதிய படத்தில் இளம் ஹீரோ ஜோடியாக அவரை ஒப்பந்தம் செய்தனர். பெரும் நம்பிக்கையுடன் இருந்தார், ஹீரோயின். இந்தப் படம் மூலம், தன் கேரியர் டேக் ஆப் ஆகும் என நினைத்தவருக்கு அடுத்த ஏமாற்றம். அந்த படம் தொடங்கப்படவே இல்லை.

கெஸ்ட் ரோல்
பிறகு சில வருடங்களுக்குப் பிறகு இப்போது, மற்றொரு தமிழ்ப் படத்தில் கெஸ்ட் ரோல் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்தப் படம் வந்தால், அதிக வாய்ப்பு கிடைக்கலாம் என்று நம்புகிறார். இதற்கிடையே, பக்கத்து மாநிலத்தில் இருந்து நடிகைக்கு வாய்ப்பு வந்தது. அந்த ஹீரோ சீனியர் என்பதால், ஹீரோயின் தேடுவதற்குள் படாதபாடு பட்டனர்.

இவர்கள் கெமிஸ்ட்ரி
பிறகு இவரும் வேறு வழியின்றி ஒப்பந்தம் ஆனார். டெஸ்ட் ஷூட் வைத்து பார்த்ததில் இருவருக்குமான கெமிஸ்ட்ரி ரொம்...ப தூரமாக இருந்திருக்கிறது. ஏனென்றால் அந்த சீனியர் ஹீரோவுக்கு வயது 60. ஹீரோயினுக்கு வயது 25. இந்த வயது வித்தியாசம், எடுத்த டெஸ்ட்

தனக்கு மட்டும் ஏன்?
அந்த ஹீரோவும் இயக்குனரும் இது சரியிருக்காது, ரசிகர்கள் கிண்டலடிக்க ஆரம்பித்து விடுவார்கள் என்று, நடிகையை நீக்கிவிட்டனர். இந்தப் படம் மூலம், அந்த மொழியில் தனி இடத்தை பிடிக்க நினைத்தவருக்கு இப்படியொரு நிலைமை. தனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது என்று மனம் வெறுத்துப் போன நடிகைக்கு ஆறுதல் சொல்லி வருகிறார்களாம், தோழிகள்.


Click it and Unblock the Notifications











