இசையமைப்பாளருடன் டிஷ்யூம் டிஷ்யூம்.. எனக்கே வேட்டு வைக்கிறீங்களா? கடுப்பான தங்கமகன்!
சென்னை : எதிர் நீச்சல் நடிகருக்கும் தங்கமகனுக்கும் இடையே ஒரே பிரச்சினை என்று சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
சின்னத்திரையில் திறமையுடன் இருந்த ஒரு நடிகரை எதிர்நீச்சல் போட்டு வெள்ளித்திரைக்கு அறிமுகம் படுத்திய தங்கமகனுக்கும், எதிர் நீச்சல் நடிகருக்கும் ஒரே பிரச்சனை என்று சினிமா வட்டாரத்திற்குள் பெரும் பரபரப்பு ஓடிக்கொண்டு இருந்தது. அதனால் தங்கமகன் மிகவும் கடுப்பில் இருந்தார் என்றும் செய்திகள் வெளிவந்தது.

தன்னுடன் சேர்ந்து நடிக்க வைத்து அறிமுகம் ஆனதும் சினிமாவில் உள்ள நெளிவு, சுளிவுகளை சொல்லித்தந்தவுடன், தனியாக மார்க்கெட் பிடித்து விட்டாராம் அந்த எதிர்நீச்சல் நடிகர். பிரபல இசையமைப்பாளர் இவர் படத்துக்கு இசை போட்டால் சூப்பர் ஹிட் அடிக்கிறது என்று தெரிந்த நமது தங்கமகன் அந்த இசையமைப்பாளரை அழைத்து, இனி அவர் படத்துக்கு இசை அமைக்க வேண்டாம் என்று கூறியிருக்கிறாராம் தங்கமகன் என்றும் செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தது.

அவர் சொன்னதை காதில் கூட வாங்காமல், தொடர்ந்து அவர் இசை அமைக்க படங்கள், பாடல்கள் அனைத்தும் ஹிட் கொடுக்க உச்சகட்ட கோபத்தில் இருக்கிறார் தங்கமகன். இதனால் அந்த இசையமைப்பாளருக்கும் , தங்கமகனுக்கும் டிஷ்யூம் டிஷ்யூம் என்று ஒரு செய்தி %E


Click it and Unblock the Notifications











