சந்தேக புத்தியால் காதலரை கழட்டி விட்ட நடிகை.. திசை மாறிய வாழ்க்கை!
சென்னை: ஒருவருடைய வாழ்க்கையில் சந்தேகம் வந்துவிட்டால், வாழ்க்கையே திசைமாறிவிடும் என்பார்கள், அப்படித்தான் நடிகை ஒருவரின் சந்தேக புத்தியால் காதலரை பிரிந்தார்.
அழகான க்யூட்டான நடிகையான இவர், சினிமாவில் அறிமுகமானதே ஒரு பிரகாசமான நடிகருடன் என்பதால், இந்த கண்ணழகி நடிகையின் திரைப்பயணமும் மிகவும் பிரகாசமாகவே இருந்தது.

முதல் படம் வரவேற்பை பெறவில்லை என்றாலும், நடிகையின் வசீகரமான முகம் அனைவருக்கும் பிடித்துப்போனதால், அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆனார்.
கொடிகட்டிப்பறந்தார்: சினிமாவிற்கு வந்ததுமே சினிமாவின் நெளிவு சுளிவுகளை நன்கு தெரிந்து கொண்ட இவர், முன்னணி நடிகர்களை வளைத்துப்போட்டு காரியத்தை சாதித்துக்கொண்டார். இதனால், இயக்குநர் மற்றும் நடிகர்களின் முதல் சாய்சாக இந்த நடிகையே இருந்து தமிழ் சினிமாவில் கொடி கட்டிப்பறந்தார். இரவு பார்ட்டி, கேளிக்கை விருந்து என ராஜ போகமாக வாழ்ந்து வந்த இந்த நடிகை பல நடிகர்களுடன் கிசுகிசுவிலும் சிக்கினார்.
படங்கள் பிளாப் ஆனது: கிசுகிசுக்களை எல்லாம் புறம் தள்ளிவிட்டு பணம் சம்பாதிப்பதிலும், பிரபலமாவதிலும் குறிக்கோளுடன் இருந்த இந்த நடிகையின் ஒரு சில படம் பிளாப் ஆனதால், வசதியான ஒருவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலாக நினைத்தார். இந்த நேரத்தில் தயாரிப்பாளர் ஒருவரிடத்தில் இருந்து அப்ரோச் வர அதை அப்படியே ஏற்றுக்கொண்டார்.
பணத்திற்கு பஞ்சம் இல்லை: தயாரிப்பாளர் பார்ப்பதற்கு சுமாராக இருந்தாலும், பணத்திற்கு பஞ்சம் இருக்காது என அவருடன் பழகி, வெளிநாடு முதல் உள்நாடு வரை இருவரும் ஜோடியாக சுற்றித்திரிந்தனர். இந்த விவகாரம் வெளியில் தெரியவந்ததை அடுத்து, இருவரும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டனர்.
காதலரை கழட்டி விட்டார்: திருமணம் நோக்கி நகர்ந்த இவர்களது காதல், பெற்றோரின் சம்மதத்துடன் வைர மோதிரமெல்லாம் மாற்றி நிச்சயமும் நடந்து முடிந்தது. நிச்சயத்திற்கு பின் கண்ணழகி நடிகைக்கு காதலர் பற்றி பல உண்மைகள் தெரியவர, ஒரு கட்டத்தில் அது சந்தேகமாக மாறியதால், அந்த காதலரை கழட்டி விட்டார். இது குறித்து அந்த காதலர் கொடுத்த விளக்கத்தை கேட்காமல் அவரை அசிங்கப்படுத்தி விரட்டி அடித்துள்ளார்.
புலம்பும் நடிகை: பக்காவாக பிளான் போட்டு திருமணத்திற்காக நடிகை போட்ட திட்டம் தோல்வி அடைந்ததால், விரக்தி அடைந்த அந்த கண்ணழகி நடிகை, திருமணமே வேண்டாம் என முடிவு செய்து சில ஆண்டுகள் தனிமையில் இருந்தார். அதன்பின் வேறு ஒரு நடிகரை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார். வருமானத்திற்காக தற்போது சினிமாவில் நடித்து வரும் இவர், சந்தேக புத்தியால் காதலரை கழட்டி விட்டதை காதலனை நினைத்து புலம்பி வருகிறாராம்.


Click it and Unblock the Notifications











