Don't Miss!
- Technology
108எம்பி கேமராவுடன் இந்தியாவில் அறிமுகமான ஒப்போ 5ஜி போன்.! என்ன விலை? என்னென்ன அம்சங்கள்?
- News
மக்களே அலர்ட்! தமிழ்நாட்டில் இன்றும் தொடரும் மழை.. எங்கெல்லாம் பள்ளிக்கு லீவ் தெரியுமா
- Lifestyle
Today Rasi Palan 04 February 2023: இன்று இந்த ராசிக்காரர்கள் யோசிக்காமல் எந்த முடிவும் எடுக்க வேண்டாம்...
- Sports
பாக். வீரர் சையது ஆப்ரிடி மகளை மணந்த ஷாகின் ஆப்ரிடி.. காதலுக்கு பச்சை கொடி.. ரசிகர்கள் நெகிழ்ச்சி
- Automobiles
திடீரென உயர்த்தப்பட்ட பெட்ரோல்/டீசல் விலை! பட்ஜெட்டில் வெளியான பகீர் ஆய்வு!
- Finance
இண்டிகோ: லாபம் 1000% வளர்ச்சி..! அடேங்கப்பா, என்ன காரணம் தெரியுமா..?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
பணத்துக்காக மட்டும் தான் நடிக்கிறேனா... பாலிவுட் போனது இப்படித்தானா..? ஒல்லி நடிகையின் அடடே விளக்கம்
சென்னை: கோலிவுட்டில் அறிமுகமாகி டோலிவுட், பாலிவுட் பக்கம் சென்று பிரபலமானவர் ஒல்லியான நடிகை.
பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகும் படங்களில் மட்டுமே ஒல்லியான நடிகை நடித்து வருகிறார்.
ஆனால், ஒல்லியான நடிகையின் படங்கள் எதுவுமே ஹிட் ஆகாமல் படுதோல்வியடைகின்றன.
இதனால் கதையை கேட்காமல் பணத்துக்காக மட்டுமே நிறைய சம்பளம் கிடைக்கும் படங்களில் நடித்து வருவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
ஷாக்கிங்.. 20 வயசு இளம் நடிகை தூக்கிட்டு தற்கொலை.. சூட்டிங் ஸ்பாட்டிலேயே நடந்த சம்பவம்

சீக்ரட் ஃபேஸ் நடிகையின் விஸ்வரூபம்
தமிழில் ரொம்பவே வித்தியாசமான சைக்கோ, திரில்லர் ஜானர் படங்களை இயக்கி வருபவர் அந்த புதுமையான இயக்குநர். அவர்தான் அந்த ஒல்லியான நடிகையை தனது கீக்ரெட் ஃபேஸ் படத்தில் அறிமுகப்படுத்தினார். முதலில் தமிழில் அறிமுகமானாலும் அதேவேகத்தில் டோலிவுட் பக்கம் சென்றுவிட்டார் அந்த நடிகை. தமிழில் அவர் நடித்த முதல் படமே பிளாப் ஆனதால், மீண்டும் கோலிவுட் பக்கம் வராமல் இருந்தார். அதேநேரம் பாலிவுட்டில் ஒரு வரலாற்றுப் பெயர் கொண்ட படத்தில் நடித்து பிரபலமானார்.

ஹிட் இல்லாமல் தவிக்கும் பரிதாபம்
அதன்பின்னர் மீண்டும் டோலிவுட் பக்கம் வந்த அந்த ஒல்லி நடிகைக்கு ஒருசில படங்கள் மட்டுமே கை கொடுத்தன. தெலுங்கில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்ததால், தமிழிலும் உச்ச நட்சத்திரம் ஒருவருடன் இணையும் வாய்ப்பு கிடைத்தது. பிரம்மாண்டமான கூட்டணியில் உருவான இந்தப் படம் இந்த வருடம் தான் வெளியானது. ஆனால், படம் மிக மோசமான விமர்சனங்களைப் பெற்று தோல்வியடைந்தது. இதனால், திரும்பவும் கோலிவுட்டில் இடம் பிடிக்கலாம் என்ற அவரின் கனவும் கலைந்து போனதாம்.

தெலுங்கிலும் மார்க்கெட் இழந்த நடிகை
அதேநேரம் தெலுங்கு பான் இந்தியா ஸ்டார் என கொண்டாடப்படும் நடிகருடனும் ஒரு பிரம்மாண்டமான படத்தில் நடித்திருந்தார் அந்த ஒல்லி நடிகை. அதேபோல் டோலிவுட்டின் லீடிங் ஸ்டார்களாக கலக்கி வரும் அப்பா, மகன் இருவரும் இணைந்து நடித்த படத்திலும் ஒல்லியான நடிகை நடித்திருந்தார். ஆனால், அவர் நடிப்பில் தெலுங்கில் வெளியான இந்த இரண்டு படங்கள் உட்பட மேலும் ஒரு திரைப்படமும் பிளாப் ஆகியுள்ளது. இதனால் அவர் மீது அன் லக்கி நடிகை என்ற முத்திரை குத்தப்பட்டு ஓரங்கட்டப்பட்டுள்ளார். அதனால் கடைசி நம்பிக்கையாக இந்தியில் நடித்த காமெடி படத்தை எதிர்பார்த்து இருந்தார் அந்த ஒல்லி நடிகை.

ஒல்லி நடிகையின் அடடே விளக்கம்
இந்நிலையில், பாலிவுட்டில் வெளியான அந்த காமெடி திரைப்படம் ஓரளவு வரவேற்பைப் பெற்றுள்ளது. இதனிடையே அந்த ஒல்லி நடிகைக்கு பணம் மட்டுமே முக்கியம் என்றும், சம்பளம் சரியாக கொடுக்கவில்லை என்றால் சரியாக ஒத்துழைப்பு கொடுக்கமாட்டார் எனவும் சொல்லப்பட்டது. அதேபோல் கேட்கும் சம்பளம் தரவில்லை என்றால், அந்தப் படத்தில் இருந்து விலகிவிடுவார் எனவும் கூறப்பட்டது. ஆனால், இதுகுறித்து விளக்கம் கொடுத்துள்ள அந்த ஒல்லி நடிகை, "கதை நன்றாக இருந்தாலும் நான் கேட்ட சம்பளம் தராவிட்டால் அந்தப் படத்தில் நடிக்க மாட்டேன் என்று சொல்லப்படுவது உண்மையில்லை. பணத்தை மட்டுமே முக்கியமாக பார்த்து நான் நடிக்கவில்லை. அப்படி இருந்திருந்தால் இவ்வளவு தூரம் வந்திருக்க முடியாது. நல்ல படங்களை தேர்வு செய்வது நடிகைகளுக்கு சவாலாக உள்ளது. சம்பளம் தான் முக்கியம் என நினைத்து நடித்திருந்தால் காணாமல் போயிருப்பேன்" என கூறியுள்ளாராம்.