பெரிய ஹீரோன்னா அப்படி, சின்ன ஹீரோன்னா இப்படியா? மூணுஷாவால் முழித்துக் கொண்டிருக்கும் படம்

By

சென்னை: பட புரமோஷனுக்கு நடிகை மூணுஷா வராமல் இழுத்தடிப்பதால், மொத்தப் படக்குழுவும் கடுப்பில் இருக்கிறது நடிகை மீது.

நடிகை மூணுஷா ஹீரோயினாக நடித்திருக்கிறார் அந்த பாம்பு, ஏணி படத்தில். அவர் நடித்து ஹிட்டான, வருட படத்துக்கு முன்பே கமிட்டான படம் இது.

இரண்டு வருடத்துக்கு முன் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் படம் கடந்த சில மாதங்களுக்கு முன் முடிந்திருக்கிறது.

அங்க பிசி, இங்க பிசி

அங்க பிசி, இங்க பிசி

பொலிட்டிக்கல் த்ரில்லர் படமான இதில் பெரிய ஹீரோ நடிக்கவில்லை. சின்ன சின்ன நடிகர்கள்தான் நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்தின் புரமோஷனுக்காக நடிகை மூணுஷாவிடம் கூறி இருக்கிறார்கள். படமே இல்லை என்றாலும், நான் அங்க பிசி, இங்க பிசி என்று சொல்லித் தட்டிக் கழித்திருக்கிறார் நடிகை. அல்லது வேறு ஏதாவது காரணத்தைச் சொல்லி விடுகிறாராம்.

அழகாக பொய்

அழகாக பொய்

அவர் இப்போது மலையாளத்தில் ஒரே ஒரு படத்தில் மட்டும்தான் நடித்து வருகிறாராம். வேறு படங்கள் இல்லையாம். என்றாலும் பிசி என்று அழகாகப் பொய் சொல்கிறாராம். பொறுத்துப் பொறுத்துப் பார்த்தப் படக்குழு, 'சரி நீங்க எப்ப ஃபிரீன்னு சொல்லுங்க, அப்ப புரமோஷனை வச்சுக்கலாம்' என்று கேட்டதாம் அவரிடம். அப்படியாவது வந்துவிடுவார் என்று எதிர்பார்த்ததாம் படக்குழு.

பெரிய ஹீரோக்கள்

பெரிய ஹீரோக்கள்

அதற்கும், நடிகை கப்சிப். எந்த பதிலும் சொல்லவில்லையாம். முந்தைய படங்களில் நடிகையுடன் பெரிய ஹீரோக்கள் நடித்ததால், அவர்களுடன் புரமோஷனில் கலந்துகொண்டார். இதில் அப்படி இல்லை என்பதால்தான் தவிர்க்கிறாராம். அவர் இதற்கு முன் நடித்த வருட படத்தில் அந்த ஹீரோ எங்கெல்லாம் சென்றாரோ, அங்கெல்லாம் சென்று புரமோஷனில் கலந்துகொண்டார்.

இப்படி பண்றாங்களே

இப்படி பண்றாங்களே

சம்பளம், புரமோஷனுக்கும் சேர்த்துதான் கொடுக்கிறாங்க...ஆனா, இப்படி பண்றாங்களே என்று ஆதங்கப்படுகிறார்கள், நடிகை மீது. நம்பர் நடிகை எந்த பட விழாக்களுக்கும் செல்வதில்லை என்பதை பாலிசியாக வைத்திருக்கிறார். இந்த ஹீரோ, அந்த ஹீரோ என்கிற பாரபட்சமெல்லாம் இல்லை. மொத்தமாக வருவதில்லை என்றே சொல்லி விடுகிறார். ஆனால், மூணு ஷா இப்படி சின்னப்படங்களை ஒதுக்குவது பற்றி கவுன்சிலில் புகார் சொல்ல இருப்பதாக தகவல்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X