twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அமைச்சர்விட்ட அதிரடி டோஸ்...அலறிப்போன விசுவாசிகள்...ரிலீஸ் ஆகுமா காமெடி ஹீரோ படம்?

    By
    |

    சென்னை: தனது பெயரைச் சொல்லி படத்தை வாங்கியவர்களை மினிஸ்டர் ஒருவர் விளாசிய தள்ளியதாக பரபரப்பாக பேசுகிறது கோலிவுட்.

    தமிழ் சினிமாவில் பல அரசியல்வாதிகள் படம் தயாரித்திருக்கிறார்கள். வினியோகம் செய்திருக்கிறார்கள்.

    சிலர் அரசியல்வாதியாகப் புகழ்பெற்ற பின் நடிக்கவும் செய்திருக்கிறார்கள். பிறகு சினிமாவை விட்டு விலகியும் இருக்கிறார்கள்.

    பினாமி மூலம்

    பினாமி மூலம்

    தமிழக அரசியலுக்கும் சினிமாவுக்கும் அப்படியொரு தொடர்பு என்பதற்கு முன், பின் வரலாறுகள் இருக்கின்றன. கடந்த சில வருடங்களாக சில அரசியல்வாதிகள், தங்கள் பணத்தை பினாமி மூலம் சினிமாவில் முதலீடு செய்வதாகக் கூறப்படுகிறது. தமிழ் சினிமாவின் முக்கியமான அந்த பைனான்சியர் கூட, அரசியல்வாதி ஒருவரது பணத்தைத்தான் அள்ளி விடுவதாகப் பேச்சு இருக்கிறது.

    சினிமா பிசினஸ்

    சினிமா பிசினஸ்

    இது ஒரு பக்கம் இருந்தாலும் தமிழ் சினிமா பிசினஸை கணிக்க முடியாமல், பல தொழிலதிபர்கள் சினிமாவை விட்டு விலகி இருக்கிறார்கள். மற்ற தொழில்களில் லாபம் சம்பாதித்திருக்கும் அவர்கள், இதில் நஷ்டம் அடைந்ததற்கு, இந்த பிசினஸை புரிந்து கொள்ள முடியவில்லை என்பதுதான். அதற்கு சில வருடங்கள் பிடிக்கும்.

    தமிழ்நாட்டு உரிமை

    தமிழ்நாட்டு உரிமை

    இதைத் தவிர்த்து ஏகப்பட்ட கோக்குமாக்கு பஞ்சாயத்துகள், உள்குத்துகள், வில்லங்கங்களும் இருக்கின்றன. இது எதுவும் தெரியாமல் ஒரு கோஷ்டி, சினிமாவுக்கு வந்திருக்கிறது சமீபத்தில். நாங்களும் படம் வாங்கி வினியோகம் பண்ண போறோம் என்று ஒரு படத் தயாரிப்பை அணுகி, தமிழ்நாட்டு உரிமைக்கு ரேட் பேசியிருக்கிறார்கள்.

    சாப்பாட்டு விஷயம்

    சாப்பாட்டு விஷயம்

    அது, சாண்டல் காமெடி, ஹீரோவாக நடித்திருக்கும் படம். பழைய சூப்பர் ஹிட் படத்தின் தலைப்பை வைத்திருக்கிறார்கள், அந்த சினிமாவுக்கு. காமெடி, ஆக்‌ஷன் மற்றும் சாப்பாட்டு விஷயத்தை பற்றி பேசும்படம் அது. அந்த ஹீரோவின் படங்கள் தொடர்ந்து அடி வாங்க, இதைத்தான் நம்பி இருந்தார், எழுந்து நிற்க!

    யோசிச்சுப் பண்ணுங்க

    யோசிச்சுப் பண்ணுங்க

    இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர், உங்களுக்கு இந்த பிசினஸ் புரியாது. யோசிச்சுக்குங்க' என்று சொல்ல, 'ச்சே ச்சே... எங்களுக்கு பின்னால, அந்த அமைச்சர் இருக்காரு... அதெல்லாம் பக்காவா நடக்கும்' என்று கெத்தாகப் பேசியிருக்கிறார்கள். அந்த கெத்தை, கொத்தாக நம்பிய தயாரிப்பாளர், அவர்களின் பினாமியாகக் கூட இவர்கள் இருக்கலாம் என நினைத்து அக்ரிமென்ட் ரெடி பண்ணினார். கையெழுத்துப் போட்டார்கள்.

    அடமானம்

    அடமானம்

    படத்தை வினியோகம் செய்த பிறகுதான் சிக்கல் வந்திருக்கிறது. ஆட்களை நம்பி, ஒவ்வொரு ஏரியாவுக்கும் படத்தை பிரித்துக் கொடுத்திருக்கிறார்கள். படத்தை வாங்கிய சிலர், அதிக விலைக்கு வேறு சிலருக்கு அடமானம் வைத்துவிட பஞ்சாயத்து, சினிமா சங்கத்து ஆபிஸுக்கு சென்றிருக்கிறது.

    பாக்கியும் வரவில்லை

    பாக்கியும் வரவில்லை

    'மினிஸ்டர் இருக்காருன்னாங்க... இப்படி சிக்கல்ல கொண்டு விட்டுட்டாங்களே?' என்று தயாரிப்பாளர் தலையில் கை வைக்காத குறையாகத் தவிக்கிறார். ஏனென்றால், அவருக்கு கொடுக்க வேண்டிய பாக்கியையும் கொடுக்கவில்லையாம். விஷயம் சம்மந்தப்பட்ட அமைச்சருக்கே சென்றுவிட, அவருக்கு அதிர்ச்சி. 'எனக்கே தெரியாம இது எப்படி?' என்று சம்பந்தப்பட்டவர்களை விளாசித் தள்ளிவிட்டாராம்.

     விசுவாசிகள்

    விசுவாசிகள்

    படத்தை வாங்கியவர்கள் அண்ணனின் விசுவாசிகளாம். இப்போது பணத்தைச் செட்டில் பண்ணும் வேலை பரபரப்பாக நடந்து வருகிறது. படம் எப்ப ரிலீஸ் ஆகுமோ, என்று ஆவலோடு காத்திருக்கிறார், அந்த அறிமுக இயக்குனர். இது ரிலீஸ் ஆனால்தான், அவரால் அடுத்தப் படம் இயக்க முடியுமாம்!

    English summary
    The Minister slams his supporters for using his name to film business
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X