Don't Miss!
- News இன்டர்நேஷனல் பிரஷர்.. மோடியை தீவிரமாக கவனிக்கும் உலக நாடுகள்.. சீக்ரெட்டை உடைத்த எக்ஸ்பர்ட்
- Lifestyle ஒருடைம் உருளைக்கிழங்கு குருமாவை இந்த ஸ்டைலில் செய்யுங்க.. அப்புறம் பாருங்க இப்படிதான் எப்பவும் செய்வீங்க..
- Finance இன்போசிஸ் எடுத்த முக்கிய முடிவு… கல்லூரி மாணவர்கள் ஷாக்.
- Automobiles ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
- Sports சுற்றி சிஎஸ்கே ரசிகர்கள்.. நடுவில் ஒற்றை ஆளாய் போட்ட ஆட்டம்.. சேப்பாக்கத்தில் லக்னோ ரசிகர் சம்பவம்!
- Technology வெளுக்குது ஆர்டர்.. ரூ.15249 பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. 45W சூப்பர்வூக்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
பர்ஸ்ட் படம்.. ஹிட்டாக்கணும்டா மவனே.. இயக்குநராக களம் இறங்கும் 'நாக்கு மடிப்பு' நடிகர்
சென்னை: தேர்தல் பிரச்சாரங்கள் ஓய்ந்துள்ள நிலையில், சினிமா பக்கமும் தன் கவனத்தை சிறிது திருப்பியுள்ளாராம் அந்த கருப்புத் தங்கத் தலைவர்.
தன் வாரிசு ஹீரோவாக அறிமுகமாகவுள்ள படத்திற்கு ஒரு வழியாக நாயகி கிடைத்து விட்ட நிலையில் விரைவில் படப்பிடிப்பைத் தொடங்க திட்டமிட்டுள்ளாராம் தலைவர். இப்படத்திற்கு பூஜை போட்டு பல மாதங்கள் ஆகிவிட்டது நினைவிருக்கலாம்.
சமீபத்தில் மற்றொரு அரசியல் கட்சித் தலைவரான நடிகரின் மகன் படம் அடுத்தடுத்து தோல்வியைச் சந்தித்தது. கேப் நடிகரின் மகனுக்கு வந்த நிலைமைதன் மகனுக்கும் வந்து விடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறாராம் இந்த தலைவர்.
எனவே, மகன் படத்தின் கதையை, குடும்பம், காதல், சென்டிமென்ட் என்று அத்தனை அம்சங்களையும் கொண்டுள்ள படமாக உருவாக்க முயற்சி செய்கிறாராம். ஒவ்வொரு காட்சியும் நன்றாக வர வேண்டும் என்பதற்காக படத்தின் முழு கதை விவாதத்திலும் கலந்து கொண்டு இந்தக்காட்சியை அப்படி வையுங்கள், அந்தக்காட்சியை இப்படி வையுங்கள் என்று ஆலோசனை வழங்கி வந்தாராம் நடிகர்.
தற்போது ஒருபடி மேலே போய், மகன் படத்தின் முதல் பகுதியை தானே இயக்க முடிவெடுத்துள்ளாராம். கட்சி வேலைகள் ஒருபுறம் இருந்தாலும், சினிமாவில் தன் மகனின் முதல்படத்தை எப்படியேனும் ஹிட் படமாக கொடுக்க வேண்டும் என சபதம் எடுத்துள்ளாராம் நடிகர்.