முதல் மனைவிக்கு கல்தா.. ஜிம்மில் மலர்ந்த காதல்.. நடிகையுடன் ரகசிய வாழ்க்கை நடத்தும் அரசியல் புள்ளி!

சென்னை: முதல் மனைவி இருக்கும் போதே அவருக்கு கல்தா கொடுத்து விட்டு, ஜிம்மில் பார்த்த நடிகையுடன் காதல் வயப்பட்டு, கடைசியில் அந்த காதல் முற்றிப்போய், வெளிநாடு வரை சென்றுள்ளது. வெளிநாட்டில் தன்னை நடிகை கவனித்த விதம், அந்த அரசியல் புள்ளிக்கு பிடித்துப்போக, மனைவியை ஒதுக்கிவைத்துவிட்டு, அந்த நடிகையுடன் ரகசியமாக வாழ்க்கை நடத்தி வருகிறார் அந்த அரசியல் பெரும் புள்ளி.

பிரபலமான அரசியல் குடும்பத்தை சேர்ந்த அந்த பெரும் புள்ளி, ஆரம்பத்தில் இருந்தே ஒரு பெரிய கட்சியில் இணைந்து, கட்சிக்காக பல வேலைகளை செய்து இருக்கிறார். அதன் பயனாக அந்த அரசியல் பெரும் புள்ளிக்கு தேர்தலில் நிற்கும் வாய்ப்பு கிடைத்தது. அதை சரியாக பயன்படுத்திக் கொண்ட அவர், கடுமையாக உழைத்து, முட்டி மோதி தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டார். அதன் பிறகு தான், அந்த அரசியல் பெரும் புள்ளியின் புத்தி திசை மாறியது என்று சொல்லாம். இவர் சொந்தமாக நடத்தி வரும் ஜிம்மிற்கு தினமும் உடற்பயிற்சி செய்வதற்காக சென்றுள்ளார். அதே ஜிம்மில், நடிகை ஒருவரும் வந்து இருக்கிறார். நடிகை என்ற முறையில் அந்த அரசியல் பிரமுகரும் பேச, நடிகையும் பேச இருவரும் ஒருகட்டத்தில் ஃபோனில் பேசும் அளவிற்கு நண்பர்களாகி விட்டார்கள்.

Kollywood gossip kisu kisu
Photo Credit:

ஜிம்மில் மலர்ந்த காதல்: நடிகையின் பேச்சும், தமிழ் பற்றும், அழகும் அந்த அரசியல் பிரமுகருக்கு மிகவும் பிடித்துப்போக, தொடர்ந்து அந்த நடிகையிடம் ஃபோனில் பேசி உள்ளார். இதனால், இருவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. நடிகையும் தனது கணவன், மகளை மறந்துவிட்டார். அதேபோல, அரசியல் பிரமுகரும் மனைவியை மறந்துவிட்டு இருவரும் எல்லை மீறி பழக ஆரம்பித்துள்ளனர். அவர்களின் கசமுசா விஷயத்திற்கு இங்கே எந்த இடமும் சரிப்பட்டு வரவில்லை. எங்கையாவது ஜோடியாக சென்றால், மீடியாவின் சிக்கிவிடுவோம் என பயந்த இவர்கள். வெளிநாட்டுக்கு டிக்கெட் போட்டு, தனித்தனியாக விமானத்தில் பறந்து சென்று காதலை வளர்த்துள்ளனர்.

வெளிநாட்டில் ஜாலி: யாரின் தொல்லையும் இல்லாமல் சுதந்திர பறவையாக இருவரும் வெளிநாட்டில் ஒருவாரம் இருந்துவிட்டு, மீண்டும் சத்தமே இல்லாமல் இந்தியா வந்துள்ளனர். இந்த விஷயம் அரசியல் பிரமுகரின் மனைவிக்கு தெரியவர குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. ஆனால், நடிகையின் மீது மோகத்தில் இருந்த அந்த அரசியல் பிரமுகரால் நடிகையை மறக்க முடியாததால், மனைவியை விவாகரத்து செய்ய முடிவு செய்துவிட்டு, நடிகையுடனே ரகசியமாக வாழ்க்கையை தொடங்கி இருக்கிறார். இந்த விஷயம், அந்த அரசியல் கட்சி பிரமுகர் இருக்கும் பெரிய கட்சிக்கு தெரியவந்ததும். அவரை அழைத்து கண்டித்துள்ளது. ஆனால், அந்த அரசியல் பெரும் புள்ளியோ தனக்கு மனைவி வேண்டாம் என்கிற முடிவில் உறுதியாக இருக்கிறார். இதனால், அந்த அரசியல் பெரும் புள்ளியின் அரசியல் வாழ்க்கை அஸ்தமனமாக உள்ளது.

விவகாரமான நடிகை: சின்னத்திரையில் சீரியல் மூலம் நடிகையான அந்த நடிகை, அண்மையில் ஒரு படத்தில் தனது முன்னழகு மொத்தத்தையும் காட்டி நடித்திருந்தார். அதுமட்டுமில்லாமல் துணிச்சலாக பேசுகிறேன் என்று யூடியூப் சேனல்களில் அமர்ந்து கொண்டு, ஆண்கள் பெண்கள் இடுப்பில் கைவைத்தால், பெண்கள் அதை ரசிக்க வேண்டும், அழகை ஆராதிக்க வேண்டும் என்று வாய்க்கு வந்ததை பேசி வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X