மூணு லவ்வும் முறிஞ்சு போச்சாம்... அந்த நடிகைக்கு அவசரமாக மாப்பிள்ளை பார்க்கும் குடும்பம்
சென்னை: பிரியமான அந்த நடிகைக்கு மூன்று காதலும் தோல்வியில் முடிந்ததால், அவசரம் அவசரமாக மாப்பிள்ளைப் பார்த்து வருகிறார்களாம்.
அப்பா பெயரை தன்னுடன் இணைத்திருக்கிறார் அந்த பிரிய நடிகை. சின்னத்திரையில் இருந்து வந்தவர் என்பதால் நடிப்பில் குறைவைக்கவில்லை. இதனால் வாய்ப்புகள் குவிகின்றன.
இருந்தாலும் பெரிய நிறுவனங்கள் பார்த்துதான் நடிக்க ஒப்புக்கொள்கிறார். தேர்ந்தெடுத்துதான் கதைகளையும் செலக்ட் பண்ணுகிறார்.

இருக்கு ஆனா
இயக்குனர் கம் நடிகர் ஒருவர் 'இருக்கு ஆனா இல்லை' என்பது மாதிரி அவரிடம் காதலைச் சொல்ல, நடிகை ஸாரி சொல்லிவிட்டார் அவருக்கு. இந்த விவகாரம் சினிமா வட்டாரத்தில் தீயாய் பரவி வருகிறது.

முதல் காதலர்
இதற்கிடையே, நடிகைக்கு ஏற்கனவே மூன்று காதல் இருந்ததாகவும் மூன்றுமே பிரேக் அப் ஆகிவிட்டதாகவும் சொல்கிறார்கள். நடிகையின் முதல் காதலர் வெளிநாட்டில் இருந்தாராம். இருவருக்குமான காதல், கல்யாணம் வரை செல்லும் என்ற நிலையில் இருந்ததாம்.

நடிப்பது பிடிக்கவில்லை
இவர் நடிக்கச் சென்றது காதலருக்குப் பிடிக்கவில்லை என்பதால் முறிந்துவிட்டதாம் அந்த லவ். அடுத்து வேறொரு லவ், அது கொஞ்ச நாட்களிலேயே மாயமாகிவிட, பிறகுதான் அந்த 'பெரிய பாஸ்' நடிகருடன் வளர்ந்ததாம் காதல்.

உடனடியாக
என்ன காரணமோ, இதுவும் முறிந்துவிட, வருத்தமானது நடிகையின் ஃபேமிலி. உடனடியாக நடிகைக்கு கல்யாணத்தை முடித்துவைக்க, மாப்பிள்ளைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்களாம் அவசரம் அவசரமாக. கோலிவுட்டில் பேச்சாகக் கிடக்கிறது இந்த லவ் விவகாரம்.


Click it and Unblock the Notifications











