ஒரே நேரத்தில் இரண்டு ஹீரோக்களை ஓட்டிய நடிகை?.. இப்பதான் அடங்கி இருக்காங்களாம்..
சென்னை: பிரபல நடிகை ஒரே நேரத்தில் இரண்டு ஹீரோக்களுடன் தொடர்பில் இருந்ததாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.
வெளிமாநிலத்தை சேர்ந்த அந்த நடிகை தற்போது செம நடிகராக வலம் வந்துகொண்டிருக்கும் நடிகர் இயக்கிய முதல் படத்தில் கேமியோ ரோலில் தோன்றினார். கவர்ச்சி நடிகையின் பெயர் கதாபாத்திரத்தில் அந்தப் படத்தில் தோன்றியிருந்தார். சில காட்சிகளிலும் ஒரு பாடலில் மட்டுமே அவர் தோன்றியிருந்தாலும் அந்தப் படம் மெகா ஹிட்டானதால் அடுத்தடுத்து வாய்ப்புகளை பெற்றார் நடிகை.

முன்னணி நடிகை: முதல் படத்தின் வெற்றிக்கு பிறகு கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக்கொண்ட அந்த நடிகை தனது திறமையையும், அழகையும் ஒருசேர வளர்த்து வெளிப்படுத்தினார். சமயங்களில் கவர்ச்சி காட்டவும் அவர் தவறவில்லை. இப்படிப்பட்ட சூழலில் மலர்களை கேட்ட படத்தில் நடித்தபோது ஹீரோவுடன் பழக்கம் ஏற்பட்டது. ஹீரோ வாரிசு நடிகர் என்பது குறிப்பிடத்தக்கது.
காதல்: அந்த ஹீரோவுடனான பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இரண்டு பேரும் அதை வெளியில் தெரியாமல் பார்த்துக்கொண்டனர். ஆனால் புற்றுக்குள் இருக்கும் கரையான் ஒருநாள் வெளியில் வந்துதானே ஆக வேண்டும். அதற்கேற்ப அவர்களின் காதலும் வெளியில் தெரிய ஆரம்பித்தது. வீட்டில் எளிதாக ஒத்துக்கொள்வார்கள் என்றுதான் ஹீரோ எதிர்பார்த்தார். ஆனால் ஹீரோவின் தந்தையோ செம ஸ்ட்ரிக்ட் என்பதால் முதலில் ஒத்துக்கொள்ளவே இல்லை.
தொடர்ந்து படங்கள்: பல வருடங்கள் இரண்டு பேரும் வீட்டு சம்மதத்துக்காக காத்திருந்தார்கள். இருந்தாலும் கடவுள் பெயர் கொண்ட ஹீரோவின் தந்தை ஒத்துக்கொள்ளவே இல்லையாம். இந்த இடைப்பட்ட காலத்தில் ஹீரோயின் வரிசையாக படங்களில் நடித்தார். முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்டார். அப்படி ஒரு படத்தில் இப்போது பெரிய ஹீரோவாக வலம் வரும் ஹேட்டர்ஸே இல்லை என்று கூறப்படும் ஹீரோவுடன் ஜோடி போட்டார். இரண்டு பேரும் சேர்ந்து நடித்த முதல் படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் அடித்து தூள் கிளப்பியது.
ஒர்க் அவுட்டான கெமிஸ்ட்ரி: முதல் படத்தில் நடித்தபோதே இரண்டு பேருக்கும் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட்டாக ஆசை ஆசையாய் அடுத்த படத்திலும் அந்த ஹீரோயினே கமிட்டானார். இந்தப் படத்தின் ஷூட்டிங்கின்போது இருவருக்குமான நெருக்கம் ஷூட்டிங் ஸ்பாட்டிலிருந்து அறைவரை சென்றுவிட்டதாம். ஒரு பக்கம் தன்னுடைய காதலன் படத்திலும் நடிக்க கமிட்டாகியிருக்கிறார்.
பிடித்த ஹீரோ: இந்த நடிகருடன் இரண்டாவது முறையாக இணைந்த படத்தின் ஷூட்டிங் குடி ஊரில் நடந்து கொண்டிருந்திருக்கிறது. இந்தப் படத்தின் ஷூட்டிங் முடிந்து மறுநாள் காதல் நடிகருடன் நடிக்க வேண்டிய படத்துக்கு நடிகை செல்ல வேண்டுமாம். ஆனால் இந்த நடிகரோ இன்று போகாதே நாளை போ என்று சொன்னாராம். ஏற்கனவே மயக்கத்தில் இருந்த நடிகை தனது காதலனுக்கு ஃபோன் செய்து இங்கு ஷூட்டிங் கொஞ்சம் இருக்கிறது. நாளை வருகிறேன் என்று சொல்லிவிட்டு இந்த நடிகருடன் ஹோட்டல் அறைக்கு சென்றுவிட்டாராம்.
சிக்கிய நடிகை: அந்த இரவு நடிகருடன் இருந்துவிட்டு மறுநாள் காதல் நடிகர் படத்துக்கு சென்றிருக்கிறார். இருந்தாலும் நடிகைக்கும் நடிகருக்கும் இருந்த நெருக்கத்தை காதலர் எப்படியோ தெரிந்துகொண்டுவிட்டாராம். இருந்தாலும் காட்டிக்கொள்ளவில்லையாம். ஒருமுறை நடிகைக்கு பிறந்தநாள் வந்திருக்கிறது. அப்போது காதல் நடிகர் வீட்டுக்கு வருகிறேன் என்று சொல்ல நடிகை அதிர்ச்சியாகிவிட்டாராம். ஏனெனில் மற்றொரு நடிகர் வீட்டில் இருந்தாராம். நடிகை அதிர்ச்சியானதை உணர்ந்துகொண்ட நடிகர், ஏன் அவன் வீட்டில் இருக்கானா இதோ வரேன் இன்னைக்கு நானா அவனா என்று பார்த்துவிடுகிறேன் என்றாராம்.
அதெல்லாம் இல்லை நீ வா என்று சொல்லிய நடிகை இன்னொரு நடிகரை நீ உடனே இங்கிருந்து கிளம்பு. அவர் வரார் என்று சொல்ல நடிகரோ ஏன் அவன் உன்னை இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை. ஏன் பயப்படுற நான் போகமாட்டேன் என்று முரண்டு பிடித்தாராம். எப்படியோ காதல் நடிகர் வருவதற்குள் இந்த நடிகரை அனுப்பிவைத்துவிட்டாராம் நடிகை. வீட்டுக்கு வந்த காதல் நடிகர் பார் அவர் இங்கு இல்லை. பிறந்தநாள் வாழ்த்து சொல்லத்தான் வந்தார் என்று சமாளித்துவிட்டாராம். காதல் நடிகரும் சமாதானம் ஆகிவிட்டாராம்.
நிலைமை இப்படி இருக்க அந்த நடிகருடன் மேடையில் நடிகை ஒரு விழாவில் கவர்ச்சி ஆட்டம் போட்டிருக்கிறார். இதனால் கொந்தளிப்புக்கு சென்ற காதல் நடிகர் இனியும் காலம் தாழ்த்தினால் வேலைக்கு ஆகாது என முடிவு செய்து தனது வீட்டில் போல்டாக பேசினாராம். அதன் பிறகு வீட்டில் ஒத்துக்கொள்ள திருமணம் நிச்சயிக்கப்பட்டதாம். திருமணம் நிச்சயிக்கப்பட்டுவிட்டது இனியும் காதல் நடிகர் இல்லாமல் இன்னொருவருடன் தொடர்பில் இருக்கக்கூடாது என்று முடிவு செய்துதான் அந்த நடிகருடனான பழக்கத்தை துண்டித்துவிட்டாராம் அம்மணி. இந்த விஷயத்தை இப்போது கோலிவுட்டில் கிசுகிசுத்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











